இவர் மட்டும் அணியில் இருந்திருந்தால் நாம கண்டிப்பா 50 ஓவர் உலககோப்பையை ஜெயிச்சி இருப்போம் – ரெய்னா ஓபன்டாக்

Raina

கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஐ.சி.சி 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்களில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி கோப்பையை நிச்சயம் கைப்பற்றும் என்று எதிர்பார்த்த நிலையில் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து ஏமாற்றத்துடன் பாதியிலேயே வெளியேறியது.

Dhoni-2

இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் நான்காவதாக வீரராக களமிறங்கும் வீரர் சரியான தேர்வு இல்லை என்று பலரும் குற்றம் சாட்டி வந்தனர் .அது முற்றிலும் உண்மைதான். ஏனெனில் நான்காவது இடத்திற்காக ஒன்றரை ஆண்டுகள் விளையாடி வந்த ராயுடு நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக விஜய்சங்கர் அணியில் இணைக்கப்பட்டார்.

ஆம் இந்த முடிவு பெரிய தவறாக அமைந்தது. இந்நிலையில் இந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் குறித்து பேட்டியளித்த ரெய்னா கூறுகையில் : நான் இந்திய அணியில் அம்பத்தி ராயுடு தான் நான்காவது வீரராக களமிறங்க வேண்டும் என்று விரும்பினேன். அவரும் அதற்காக கடுமையாக உழைத்தார்.

rayudu

தொடர்ச்சியாக ஒன்றரை ஆண்டுகள் அணியில் இடம் பிடித்து விளையாடினார். சிறப்பாக விளையாடிய போதிலும் அவருக்கு உலக கோப்பை அணியில் இடம் கிடைக்கவில்லை. நான்காவது இடத்திற்கு அவரே சிறந்த வீரர். அவர் மட்டும் அணியில் இடம் பிடித்து இருந்தால் இந்திய அணி நிச்சயம் உலகக்கோப்பையை வென்று நிற்கும் என்று சுரேஷ் ரெய்னா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்த ரெய்னா தற்போது சிஎஸ்கே அணிக்காக அம்பத்தி ராயுடு உடன் இணைந்து விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.