தோனியின் வாழ்க்கையில் மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்தது இந்த தொடரில் அடைந்த தோல்விதான் – ரெய்னா ஓபன் டாக்

Raina-5

முன்னாள் கேப்டன் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி விடைபெற்றார். அவர் ஓய்வை அறிவித்து ஆறு நாட்கள் ஆகியும் இன்னும் அவர் தொடர்பான கருத்துகள், செய்திகள் ஆகியவை ஓய்வு பெறவில்லை. தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்தும் தோனிக்கு வாழ்த்துக்களும், கருத்துக்களும் குவிந்து வருகின்றன. பிரதமர் கூட தோனிக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

Dhoni

அந்த வகையில் தோனியை நெருங்கிய நண்பரும், சென்னை அணியின் துணை கேப்டனான ரெய்னா தோனி குறித்த தனது கருத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில் : தோனி ஆட்டத்தின் போக்கை நன்றாக கவனிப்பார். கடந்த பல ஆண்டுகளில் அதை நாங்கள் பார்த்திருக்கிறோம். நீங்களும் அதனை கவனித்து இருக்க முடியும்.

போட்டியின் போது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் வீரர்களிடையே உரையாடுவார். 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் ஏற்பட்ட தோல்வி தோனியின் வாழ்வில் அவர் கண்ட மிகப்பெரும் பாடம் அதுவே அவருக்கு திருப்புமுனையாகவும் அமைந்தது. அவர் என்னிடம் ஒருமுறை பேசும்போது வாழ்வில் பல வெற்றிகளை நாம் பார்த்திருப்போம். ஆனால் ஒரு தோல்வி ஏராளமான பாடங்களை நமக்கு கற்றுக்கொடுக்கும் என்று கூறினார்.

Dhoni

அதிலிருந்து அவன் 2007 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியின்போது அடைந்த தோல்விகளில் அடிபட்டு அனுபவித்திருக்கிறார் என்று புரிந்து கொண்டேன் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்தார். தோனி ஓய்வு அறிவித்து அதே நாளில் ரெய்னாவும் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Dhoni-1

2007 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்குப் பின் அதே ஆண்டு தோனியின் கைகளில் இந்திய அணி ஒப்படைக்கப் பட்டது. அதன் பின்னர் அதே ஆண்டில் டி20 உலக கோப்பை தொடர், 2011 இல் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர், 2013 சாம்பியன்ஸ் டிராபி என தோனி சகாப்தம் படைத்தது நாம் அறிந்ததே.