விராட் கோலி எடுத்த இந்த முடிவு சரியானது தான். அதுல எந்த தப்பும் இல்லை – சுரேஷ் ரெய்னா ஆதரவு

Raina

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. கடந்த 17ம் தேதி பகலிரவு போட்டியாக நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை பெற்றது. இந்நிலையில், தற்போது சிறப்பாக நடைபெற்று முடிந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆஸ்திரேலிய அணியை பழிதீர்த்தது.

indvsaus

இதையடுத்து வருகின்ற ஜனவரி 7ஆம் தேதி 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக வீரர்கள் இரண்டு நாட்கள் முன்பாகவே மைதானத்திற்கு வந்து தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டி முடிவடைந்தவுடன் தாயகம் திரும்பினார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. இவர் தனது மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பத்தில் இருப்பதால் தாயகம் திரும்புவதாக தெரிவித்தார்.

இதனால் இந்திய அணியின் கேப்டனாக அஜின்கியா ரகானே செயல்பட்டு வருகிறார். அதுமட்டுமின்றி இரண்டாவது டெஸ்டில் ரகானே தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்றதுக்கு ரகானேவை பாராட்டினார் விராட் கோலி. தற்போது விராட் கோலியின் இந்த முடிவு தான் சரியானது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். மேலும் பேசிய ரெய்னா கூறுகையில் :

indvsaus

“கிரிக்கெட் போட்டிகள் பின்பு கூட விளையாடலாம். ஆனால் முக்கிய நேரங்களில் குடும்பத்தினருடனும் நேரம் செலவிடுவதும் முக்கிய தான். தற்போது விராட் கோலி மனையின் கர்ப்ப காலத்தில் அவர் இருக்க நினைத்தது சரியான முடிவு” என்றுள்ளார் ரெய்னா. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுரேஷ் ரெய்னா தனது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

indvsaus

விராட் கோலியின் இந்த விடுப்பு குறித்து சுனில் கவாஸ்கர் உட்பட சிலர் விமர்சித்தாலும் ஒரு சிலர் அவரின் இந்த முடிவை ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசி வருகின்றனர். அந்த வகையில் தற்போது விராட் கோலியின் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.