குட்டி தல பிறந்த சில மணி நேரத்திலேயே புகைப்படம் மட்டுமின்றி பெயரையும் சேர்த்து வெளியிட்ட ரெய்னா – வைரலாகும் புகைப்படம்

Raina-1

இந்திய அணியின் முன்னணி வீரரும், உத்திரபிரதேசத்தை சேர்ந்த வீரருமான சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்காக கடந்த 2005ஆம் ஆண்டு அறிமுகமானார். அதன்பிறகு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வரும் இவர் சமீபத்தில் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார்.

Raina-Wife

இந்திய அணியில் மிகமுக்கியான வீரராக விளங்கி வந்த இவர் இந்திய அணி உலககக்கோப்பையை வென்ற 2007 ஆம் டி20 அணியிலும், 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலககோப்பை அணியிலும் இடம்பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுரேஷ் ரெய்னா கடைசியாக இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் 2018 ஆம் ஆண்டு பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக இதுவரை 18 டெஸ்ட் போட்டிகள், 226 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. 2018 ஆம் ஆண்டிலிருந்து இவர் அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வருகிறார்.

Priyanka raina 1

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரராக இருக்கும் சுரேஷ் ரெய்னாவும் அவரது மனைவி பிரியங்காவிற்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு 2016 ஆம் ஆண்டு கிரேசியா ரெய்னா என்கிற ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது சின்ன தல ரெய்னாவுக்கு மேலும் ஒரு குட்டி தல பிறந்திருக்கிறார்.

- Advertisement -

ஆம் சுரேஷ் ரெய்னா மற்றும் பிரியங்கா தம்பதியருக்கு இரண்டாவதாக இன்று ஆண்பிள்ளை பிறந்திருக்கிறதாம். மேலும் பிறந்த சிலமணிநேரத்திலேயே தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் ரெய்னா பதிவிட்டுள்ளார். ரெய்னா பதிவிட்ட இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் பிறந்த சிலமணி நேரத்திலேயே புகைப்படத்தை பதிவிட்டது மட்டுமின்றி தனது மகனுக்கு ரியோ ரெய்னா என்று பெயர்வைத்துள்ளார். மேலும் கிரேசியா விற்கு தம்பி வந்துவிட்டான் என்று அவர் குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.