நீங்கள் எங்களை விட்டு சென்றாலும் நீங்கள் ஒரு இன்ஸ்பிரேஷன் – நீண்ட நாட்கள் கழித்து மனமுறுகிய ரெய்னா

Raina

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி ஓய்வு ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே தானும் அவரது வழியை தீர்மானிப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டனான சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்தார்.

Raina-5

அவரின் இந்த அறிவிப்பை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இரட்டிப்பு சோகத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க துபாய் சென்றுள்ள ரெய்னா சமீபத்தில் மறைந்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது : சகோதரா நீங்கள் எப்போதும் எங்களின் இதயத்தில் உயிருடன் இருக்கிறார்கள். உங்களது ரசிகர்கள் எல்லாவற்றையும் விட உங்களை அதிகமாக இழந்ததாக உணர்கிறார்கள். எனக்கு அரசாங்கம் மீது நம்பிக்கை உள்ளது. இங்கு உள்ள தலைவர்கள் உங்களது இழப்பிற்கு நீதி வழங்கும் வகையில் உங்கள் இறப்பு சம்பந்தப்பட்ட ஒரு சிறு கல்லையும் கூட விடமாட்டார்கள்.

உண்மையில் நீங்கள் ஒரு உத்வேகம் அளிக்கக் கூடிய மனிதர் என்று பதிவிட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் இந்த பதிவு தற்போது ரெய்னா ரசிகர்கள் மற்றும் சுஷாந்த் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மட்டுமின்றி அதிக அளவு பதிக்கப்பட்ட வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -