வரும் போட்டிகளில் இவர் நிச்சயம் சாதிப்பார். இளம்வீரரான இவருக்கு அபாரமான டேலண்ட் இருக்கு – ரெய்னா சப்போர்ட்

- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் துவங்க இருந்த பதின்மூன்றாவது ஐபிஎல் சீசன் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக இதுவரை இத்தொடர் நடைபெறாமல் உள்ளது. மேலும் எப்பொழுது ஐபிஎல் போட்டிகள் துவங்கும் என்ற உறுதியான தகவலும் இதுவரை கிடைக்காததால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

ipl

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்தியா முழுவதும் ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டு வருவதால் வீரர்கள் தங்களது பயிற்சியை துவங்கியுள்ளனர். அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இந்திய வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இணைந்து ஒரு வாரத்திற்கும் மேலாக வலை பயிற்சி செய்து வருகின்றனர்.

கொரோனாவினால் ஐ.பி.எல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள இந்த சூழலில் அவர்களது பயிற்சி மற்றும் அனுபவங்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த வலைப் பயிற்சியில் பண்டின் செயல்பாடு குறித்து பேசிய ரெய்னா கூறுகையில் : அவர் உண்மையிலேயே திறமை வாய்ந்த வீரர் மேலும் எந்தவித சமரசமும் இன்றி இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அப்படி விளையாடினால் அவரால் நிறைய ரன்களை குவிக்க முடியும் என்று ரெய்னா தெரிவித்தார்.

Pant

மேலும் இனி வரும் போட்டிகளில் அவருக்கு ஆதரவளித்து வாய்ப்பு தரும் போது அவருடைய தன்னம்பிக்கை அதிகரித்து நிச்சயம் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று தான் நம்புவதாக பண்ட் குறித்து ரெய்னா பேசினார். மறுபக்கம் பேசிய பண்ட் : 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று கொடுத்த வீரரோடு இணைந்து பயிற்சி செய்வது நல்ல அனுபவமாக அமைந்தது.

- Advertisement -

நிறைய விடயங்களை இந்த பயிற்சியில் நான் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அவரோடு நிறைய பேசுவது என எனது கேமை மேம்படுத்த உதவுகிறது. பல மாதங்களாக பயிற்சி செய்யாமல் இருந்து விட்டதால் தற்போது பயிற்சியை ஆரம்பித்து உள்ளேன். வீட்டிலேயே இருப்பது ஒரு விதமான சோம்பலை ஏற்படுத்திவிடும்.

pant 1

இதனால் வரவிருக்கும் நாட்களில் நான் தொடர்ந்து பயிற்சியை மேற்கொண்டு இனிவரும் நாட்களில் கிரிக்கெட் விளையாட இந்தப் பயிற்சி உதவும் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், பண்ட் டெல்லி அணிக்காக விளையாடி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement