தோல்விக்கு கம்பீர் காரணமில்ல.. இல்லனா எப்படி இந்தியா அதை ஜெய்ச்சுருக்கும்? ரெய்னா ஆதரவு

Suresh Raina
- Advertisement -

கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் 15 வருடங்கள் கழித்து இந்தியா சொந்த மண்ணில் தோல்வியுற்றது. அடுத்ததாக கௌகாத்தியில் நடைபெறும் 2வது போட்டியிலும் 549 ரன்கள் இலக்கை துரத்தும் இந்தியா 29/2 என திண்டாடி வருகிறது. அதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தோல்வியை சந்திப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக 3 – 0 (3) என்ற கணக்கில் இந்திய அணி வரலாறு காணாத ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விகளுக்கு புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். ஏனெனில் சோதனை என்ற பெயரில் அடிக்கடி வீரர்களை மாற்றும் அவர் தேர்ந்தெடுத்த வீரர்களுக்கும் நிலையான வாய்ப்புகளை வழங்குவதில்லை.

- Advertisement -

கோச் என்ன செய்வாரு:

எடுத்துக்காட்டாக கடந்த நியூசிலாந்து தொடரில் சதத்தை அடித்த சர்ஃபராஸ் கானுக்கு தற்போதைய அணியில் இடமில்லை. வாஷிங்டன் சுந்தரை ஓப்பனிங் தவிர்த்து 3, 5, 6, 7, 8 ஆகிய பல்வேறு பேட்டிங்கில் களமிறக்கியது இந்தியாவின் வெற்றிக்கு உதவவில்லை. அதனால் சொந்த மண்ணில் இந்தியா திண்டாடுவதற்கு கௌதம் கம்பீர் தான் முக்கிய காரணம் என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த தோல்விகளுக்கு கௌதம் கம்பீர் காரணமில்லை என்று முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ஒருவேளை கௌதம் கம்பீர் மோசமான பயிற்சியாளராக இருந்தால் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அசத்துமா? என்று ரெய்னா தெரிவித்துள்ளார். எனவே வெற்றிக்கு இந்திய அணி வீரர்கள் நன்றாக விளையாடுவது அவசியம் என்று தெரிவிக்கும் ரெய்னா இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ரெய்னா ஆதரவு:

“கௌதம் பையா கடினமாக உழைத்துள்ளதால் இது அவருடைய தவறு கிடையாது. வீரர்கள் கடினமாக உழைத்து நன்றாக விளையாட வேண்டும். அவரது தலைமையில் இந்தியா வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் நன்றாக விளையாடி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசியக் கோப்பையை வென்றது. பயிற்சியாளர் வீரர்களுக்கு வழிகாட்டி, ஆலோசனைக் கொடுத்து, ஆதரவு மட்டுமே கொடுக்க முடியும்”

இதையும் படிங்க: பிட்ச் கஷ்டமானாலும்.. 5வது நாளில் இதை செஞ்சாலே இந்தியாவுக்கு வெற்றி மாதிரி தான்.. ஜடேஜா பேட்டி

“வீரர்கள் தான் ஸ்கோர் செய்ய வேண்டும். நான் கம்பீர் பாயுடன் விளையாடி உலகக்கோப்பை வென்றுள்ளேன். அவர் இந்திய கிரிக்கெட்டை மிகவும் நேசிக்கக்கூடியவர். களத்தில் விளையாடும் வீரர்களே பொறுப்புடன் சிறப்பாக விளையாட வேண்டும். டெஸ்ட் தொடருக்கு இன்னும் நாம் நன்றாக தயாராக வேண்டும். ஏனெனில் அதிகம் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விளையாடும் நீங்கள் திடீரென டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு தயாராக போதுமான நேரம் கிடைக்காது. வீரர்கள் களத்தில் தங்களுடைய ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும். இவையும் கணக்கில் கொள்ளப்படும் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.

Advertisement