சேவாக் மற்றும் யுவ்ராஜ் சிங் சேர்ந்த கலவையாக இவர் அதிரடியில் அசத்துகிறார் – இளம்வீரரை புகழ்ந்த ரெய்னா

Raina
- Advertisement -

தற்போது இந்திய அணிக்கு விக்கெட் கீப்பராக இருக்கும் ரிஷ பன்ட் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் அபாரமாக ஆடி இந்திய அணியில் இடம் பெற்றவர். அந்த தொடரின் போது 54 பந்துகளில் சதமடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். துவக்க வீரராக அதிரடியாக துவம்சம் செய்வதில் வல்லவர்.

அதற்குப் பின்னர் டெல்லி அணிக்காக ஐபிஎல் தொடர்களில் ஆடிவருகிறார். டெல்லியிலும் தொடர்ச்சியாக நன்றாக ஆட இந்திய அணியில் விக்கெட் கீப்பராக களம் இறக்கப்பட்டார். தற்போது வரை ஒரு சில போட்டிகளில் மட்டுமே நன்றாக ஆடி இருந்தாலும், அவருடைய அபார திறமைக்காகவும், அதிரடியான ஆட்டத்திற்கக்காகவும் எப்படியாவது அவரது திறமையை வெளியே கொண்டு வந்து விட வேண்டும் என இந்திய அணி இன்னும் அவரைப் பற்றிப் பிடித்துக் கொண்டு இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் ரிஷப் பண்ட் குறித்து சுரேஷ் ரெய்னா, இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ரிஷப் பண்ட் ஒரு அசாதாரணமான கிரிக்கெட் வீரர். அவர் நன்றாக ஆடுவதைப் பார்க்க மிகவும் அழகாக இருக்கும். நன்றாக ஆடும் போதெல்லாம் யுவராஜ் சிங்ம் சேவாக் போன்று ஆதிக்கம் செலுத்துவார். பிலிக் ஷாட் ஆடும் போது எனக்கு டிராவிட்டை நினைவூட்டுகிறார்.

அதே நேரத்தில் விராட் கோலி ஒரு மிகவும் திடமான கேப்டன். அவரிடம் நிறைய ஆற்றல் இருக்கிறது பல விஷயங்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். குறுகிய வடிவ போட்டிகளில் ஆடும் போது நிறைய எனர்ஜி தேவைப்படுகிறது என்று கூறினார் ரெய்னா. கடைசியாக ரிஷப் பண்ட் நியூசிலாந்தில் நடந்த 2 போட்டிகளில் 60 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pant 1

மேலும் தொடர்த்தியான சொதப்பலுக்கு பிறகு தற்போது பண்ட் அணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு அவருக்கு பதில் கே.எல். ராகுல் அணியில் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement