இந்திய அணி இன்னைக்கு சேசிங்ல கிங்கா இருக்குனுனா அதுக்கு இந்த கோச் தான் காரணம் – ரெய்னா ஓபன்டாக்

Raina
- Advertisement -

கடந்த காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியை சிதைத்ததில் 2005ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டிருந்த கிரேக் சாப்பலுக்கு அதிகமான பங்கு இருக்கிறது. அவருடைய பயிற்சிகாலத்தில் அவருக்கும் மூத்த வீரர்களான சச்சின், லஷ்மன் மற்றும் அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த சவுரவ் கங்குலி ஆகியோர்களுக்கு இடையில் எழுந்த கருத்து வேறுபாடுகள் செய்தியாக வெளிவந்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. மேலும் கிரேக் சாப்பலின் பயிற்சிதான் 2007ஆம் நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பைக்கான தொடரில் லீக் சுற்றோடு இந்திய அணி வெளியேற மிக முக்கியமான காரணமாகவும் பார்க்கப்பட்டது.

Chappell1

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியானது சேஸிங்கின்போது பயிமில்லாமல் விளையாடவும், இளம் வீரர்களுக்கு நேர்மறையான சிந்தனைகளை வழங்கியதிலும் கிரேக் சாப்பலுக்கு மிக முக்கிய பங்குள்ளாதாக தனது சுய சரிதையில் தெரிவித்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா. கிரேக் சாப்பல் குறித்து “பிலீவ்” என்ற தனது சுயசரிதையில் பெருமையாக எழுதியிருக்கும் அவர், கிரேக் சாப்பல் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்தபோது, அவரின் மேல் பல விமர்ச்சனங்கள் வைக்கப்பட்டு பெரும் சர்ச்சைகள் எழுந்திருந்தாலும், இந்திய அணி எவ்வாறு வெற்றி பெற வேண்டும் என்றும் வெற்றியின் முக்கியத்துவத்துவத்தைப் பற்றியும் இந்திய வீரர்களுக்கு அவர் கற்றுக் கொடுத்தார் என்று எழுதியருக்கும் ரெய்னா,

சேஸிங்கின்போது இந்திய வீரர்கள் தடுமாறுவதை கிரேக் சாப்பல்தான் சரி செய்தார் என்றும் எழுதியிருக்கிறார். 1990 மற்றும் 2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதி வரை சேஸிங்கின் போது இந்திய அணியின் பேட்டிங் வரிசையானது கடுமையான சரிவை சந்தித்து, பல போட்டிகளில் தோல்வியை தழுவியிருக்கிறது. ஆனால் கிரேக் சாப்பல் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு ராகுல் ட்ரவிட் தலைமையிலான இந்திய அணியானது சேஸிங்கில் தொடர்ச்சியாக 14 போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Chappell 2

இந்திய அணியின் இந்த மாற்றத்திற்கு கிரேக் சாப்பல் தான் காரணம் என்று கூறியிருக்கிறார் ரெய்னா. இதுபற்றி தனது சுயசரிதையில் எழுதியிருக்கும் அவர், நாங்கள் நன்றாக விளையாடிய அந்த கால கட்டத்திலும், சேஸிங்கின் போது அதிக அழுத்தத்தினால் தடுமாறவே செய்தோம். சேஸிங்கின் போது பேட்ஸ்மேன்கள் மீது இருந்த அந்த அழுத்தத்தை கிரேக் சாப்பல் வெகுவாக குறைத்து, இந்திய அணியை வெற்றி பெறவும் வைத்தார் என்று அவர் தனது சுய சரிதையில் கூறியிருக்கிறார்.

Raina-5

கிரேக் சாப்பல் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட 2005ஆம் ஆண்டுதான் சுரேஷ் ரெய்னாவும் இந்திய அணியில் அறிமுகமாகியிருந்தார். சீனியர் வீரர்களை வெறுத்த சாப்பலின் நம்பிக்கை மிகுந்த வீரர்களின் வரிசையில் அப்போது இளம் வீரர்களாக இருந்த சுரேஷ் ரெய்னா மற்றும் மஹேந்திர சிங் தோணி ஆகியோர் இடம்பிடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement