பல நாட்களாக ஆவலோடு நாம் அனைவரும் எதிர்பார்த்த 11வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது.8அணிகள் பங்குபெறும் இந்த ஐபிஎல்-இல் மொத்தம் 9 நகரங்களில் மொத்தம் 51 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 60 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டம் என ஒட்டுமொத்தமாக 64 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன.
#ChinnaThala at Chinnaswamy! #WhistlePodu ???????? @ImRaina pic.twitter.com/ekQfvymHEO
— Chennai Super Kings (@ChennaiIPL) April 24, 2018
இத்தனை நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும் இனி தினமும் ஒவ்வொரு ஆட்டத்திலும் வீரர்கள் பூர்த்தி செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.ஐபிஎல் தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பிலிருந்தே ஐபிஎல் தொடர்பான மீம்ஸ்கள், வீரர்களின் சமூகவலைத்தள பதிவுகள், பேட்டிகள் மற்றும் வீடியோக்கள் என அனைத்தையும் டிரெண்டாக்கியதோடு மட்டுமில்லாமல் ரசிகர்கள் வைரலாக்கி அசத்தினர்.
ஐபிஎல் தொடங்கும் முன்னர் வெளியான வீடியோக்களையே டிரெண்டிங்கில் கொண்டுவந்த ரசிகர்கள் இப்போது ஐபிஎல் தொடர் தொடங்கியதும் அது தொடர்பான மீம்ஸ்கள், வீரர்களின் பேட்டிகள், வீடியோக்கள் என அனைத்தையும் தேடித்தேடி முன்பைவிட அதிகளவில் வைரலாக்கி வருகின்றனர்.
இதோ அப்படி ஐபிஎல் வெறியர்களால் (ரசிகர்களால்) வைரலாக்கப்பட்டு வரும் மற்றொரு வீடியோ உங்களுக்காக.