தற்போது உள்ள இந்திய அணியின் மிகச்சிறந்த பீல்டர் இவரே – சுரேஷ் ரெய்னா ஓபன் டாக்

Raina
- Advertisement -

கொரனோ பாதிப்பினால் இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் கிரிக்கெட் போட்டியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் மீண்டும் எப்போது கிரிக்கெட் துவங்கும் என்று தெரியாத நிலையில் வீட்டில் முடங்கி இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் தங்களது அனுபவங்களை சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி சக வீரர்களுக்கு இடையே நேரலையில் உரையாடியும் வருகின்றனர்.

Raina

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் பீல்டிங் குறித்து முன்னணி வீரரான ரெய்னா தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். 2000வது ஆண்டின் துவக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. யுவராஜ் சிங், முகமது கைஃப் போன்றவர்கள் அணிக்கு வந்த பின்னரே பீல்டிங்கில் ஓரளவு இந்திய அணி முன்னேற்றம் கண்டது.

- Advertisement -

இவர்கள் இருவரும் மிகச் சிறந்த வீரர்களாக திகழ்ந்தனர். அதன் பிறகு 2005 ஆம் ஆண்டு சுரேஷ் ரெய்னா இந்திய அணியில் இடம் பிடித்தார். இவரும் இந்தியாவின் மிகச் சிறந்த பீல்டர்களில் ஒருவர் டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக உடற்தகுதி அவசியம் குறித்து பேசப்பட்ட போது அந்த காலத்தில் சிறந்த பீல்டர்கள் அணியில் இல்லை.

Raina

இதற்கிடையில் தற்போது கேப்டன் விராட் கோலி தலைமையில் இந்திய அணி பீல்டிங் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் யாதெனில் வீரர்களை உடற்தகுதி திறன்தான். இப்போதுள்ள அணியில் மணிஷ் பாண்டே, ரவிந்திர ஜடேஜா என துடிப்பான இளம்வீரர்களினால் பீல்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

- Advertisement -

இதற்கிடையே இந்திய அணியில் தற்போது உள்ள வீரர்களில் மிகச்சிறந்த பீல்டர் யார் என்பது குறித்து முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : தற்போது உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை அஜிங்கிய ரஹானே ஸ்லிப் திசையில் கேட்ச் பிடிப்பதில் சிறந்த வீரராக திகழ்கிறார்.

அவர் பீல்டிங் செய்யும் முறை சிறப்பாக உள்ளது. அவர் அசைவின் போது அவர் உடல் நன்றாக வளைந்து கொடுக்கிறது. இதனால் மற்ற பீல்டர்களிடம் இருந்தும் அவர் தனித்து காணப்படுகிறார். தற்போதைய டெஸ்ட் அணியின் மிகச்சிறந்த ஸ்லிப் பீல்டர் என்றால் அது அளித்த ரஹானே தான் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்தார்.

Rahane

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக ரஹானே வங்கதேச அணிக்கு எதிரான தொடரின் போது சில கேட்சிகளை தவறவிட்டு சற்று ஏமாற்றம் ஏமாற்றம் அளித்தார். அப்போதைய கிரிக்கெட் பயிற்சியாளர் ஸ்ரீதர் கூட ரகானே கேட்ச் விடுவதைப் பார்க்க ஆச்சரியமாக இருப்பதாக தனது ஏமாற்றத்தை தெரிவித்தார். இருப்பினும் இந்திய அணியின் சிறந்த பீல்டர் இவரே என்று ரெய்னா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement