
இந்திய கிரிக்கெட் அணி நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தற்சமயத்தில் சுமாரான ஃபார்மில் இருக்கிறார். குறிப்பாக கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களில் அவர் வெளிப்படுத்திய சுமாரான பேட்டிங் இந்தியாவின் தோல்விக்கு காரணமானது. அதன் காரணமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற முடியாமல் இந்தியா முதல் முறையாக வெளியேறியது.
இத்தனைக்கும் சர்வதேச கிரிக்கெட்டில் 26,000+ ரன்கள் 81 சதங்கள் அடித்த அவர் பெரிய அனுபவம் கொண்ட ஜாம்பவான் பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். ஆனால் அதையும் தாண்டி அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் அவர் தனது விக்கெட்டை கொடுத்தது இந்திய ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது. அதனால் விராட் கோலி ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டதாக ஒரு தரப்பு ரசிகர்கள் விமர்சித்தனர்.
இந்நிலையில் தோல்வியைப் பற்றிய பயம் அறியாத அல்லது போராடாமல் தோல்வியை சந்திக்காத வட மாநிலத்திலிருந்து விராட் கோலி வந்துள்ளதாக சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். எனவே அடுத்து நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியில் அவர் அசத்துவார் என்று ரெய்னா நம்பிக்கை ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.
“அவருடைய மனநிலை மிகவும் வித்தியாசமானது. அவர் உடைமாற்றும் அணியில் உங்களுக்கு நல்ல சக வீரராக இருக்கக்கூடியவர். அதே சமயம் எப்போதும் சுவிட்ச்சை மாற்றுவதற்கு தயாராக இருப்பவர். பயிற்சிகளை எடுக்கும் போது வித்தியாசமாக தயாராகும் அவர் ஃபீல்டிங் செய்யும் போது முதல் ஆளாக வந்து வெற்றிக்காக நாம் போராடுவோம். அதற்காக ஃபீல்டிங் செய்வோம் என்று சொல்லக்கூடியவர்”
“அவருடன் சேர்ந்து நானும் மகிழ்ச்சியாக ஃபீல்டிங் செய்தேன். ஏனெனில் களத்தில் வித்தியாசமாக செய்யக்கூடிய அவர் டைவிங் செய்வதற்கு ஆர்வத்துடன் இருப்பார். அது மற்ற அனைத்து வீரர்களின் அணுகுமுறையை மாற்றும். நல்ல திறமையைக் கொண்டுள்ள அவர் கொஞ்சம் வித்தியாசமான வடக்கு இந்தியாவில் இருந்து வந்துள்ளார். அங்கிருந்து வரும் வீரர்களால் தோல்வியைத் தாங்க முடியாது”
இதையும் படிங்க: பிசிசிஐக்கு பயந்து ரஞ்சிக் கோப்பை.. கடமையை செய்த ரோஹித் முன்னேறவே இல்ல.. கவாஸ்கர் அதிருப்தி
“எப்படி தோற்பது என்பது எங்களுக்கு தெரியாது. சாகும் வரை வெற்றியை நாங்கள் விடமாட்டோம். அது போன்ற அணுகுமுறையைத் தான் விராட் கோலி கொண்டுள்ளார்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து ரஞ்சிக் கோப்பையில் 12 வருடங்கள் கழித்து விராட் கோலி களமிறங்க உள்ளார். அதை முடித்துக் கொண்டு எங்களால் ஒருநாள் தொடரில் விளையாடும் அவர் சாம்பியன்ஸ் டிராபியில் களமிறங்க உள்ளார்.