செம பிரிலியன்ட் 50 ரெய்னா. சின்ன தலையை ட்விட்டரில் பாராட்டிய பிரதமர். ஏன் தெரியுமா? – விவரம் இதோ

Raina-1

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்காக உலக நாடுகள் கடுமையாக போராடி வருகிறது. தற்போதுவரை 25 ஆயிரம் பேர் இதனால் உயிரிழந்துள்ளனர் . அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது.

corona

இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல பிரபலங்களும் கிரிக்கெட் வீரர்களும் அரசு ஊழியர்களும் தங்களால் முடிந்த உதவியை அரசாங்கத்திற்கு செய்து வருகின்றனர்.

இந்த வைரஸின் தாக்கத்தை எதிர்த்து போராடுவதற்கு காக்கும் மருத்துவ உபகரணங்கள் வாங்கவும் மக்களுக்கு உதவி செய்யவும் இந்த உதவித்தொகை பயன்படும். முன்னதாக பிசிசிஐ தலைவராக உள்ள சவுரவ் கங்குலி 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரிசி மூட்டைகளை ஏழை மக்களுக்கு வழங்கியுள்ளார்.

இந்த 50 லட்சத்தை வைத்து ஏழை எளிய மக்களுக்கு ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பதாக கூறியுளாளார் சவுரவ் கங்குலி. ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் வீரரும், பாராளுமன்ற எம்.பி ஆன கம்பீர் மருத்துவ உபகரங்களுக்காக 50 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார்.
இவரை தொடர்ந்து இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 50 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளார்.

- Advertisement -

இதனைத்தொடர்ந்து தற்போது இந்திய அணியின் வீரரான சுரேஷ் ரெய்னா (ரூபாய் 52 லட்சம்) கொரோனா வைரஸ் பாதிப்பிற்காக அளித்துள்ளார். அதில் (31 லட்சம் ரூபாய்) பிரதம மந்திரியின் தேசிய பேரிடர் மீட்பு கணக்கிற்கும், (21 லட்சம்) உத்திரபிரதேச முதல்வர் மீட்பு பணிக்கு வழங்கி உள்ளார்.

ரெய்னாவின் இந்த உதவியினை பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : பிரிலியன்ட் 50 ரெய்னா என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.