2020 டி20 உலகக்கோப்பையில் நான் நிச்சயம் இதனை செய்வேன். இதுவே என் இலக்கு – சுரேஷ் ரெய்னா உறுதி

Raina
- Advertisement -

ஆஸ்திரேலிய நாட்டில் அடுத்த வருடம் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடருக்காக இந்திய அணி தற்போது டி20 அணியை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

rainasuresh

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா தற்போது டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : என்னால் 2020 மற்றும் 2021 டி20 உலக கோப்பையில் பங்கேற்க முடியும் என்று நான் நம்புகிறேன். மேலும் தற்போது காயத்திலிருந்து மீண்டு பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன். என்னால் நிச்சயம் இந்திய அணிக்காக சிறப்பான பேட்டிங்கை கொடுக்க முடியும்.

நான் ஏற்கனவே பல முறை இந்திய அணிக்காக இதனை செய்து உள்ளேன். இந்தியாவின் நம்பர் 4 இடம் தற்போது சிக்கலாக உள்ளது. அந்த சிக்கலை போக்க நான் அந்த இடத்தில் களம் இறங்க பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன். ஏற்கனவே ராயுடு, சங்கர் ஆகியோர் அந்த இடத்தில் விளையாடி வெளியேறியதால் தற்போது அந்த இடத்தில் பண்ட் விளையாடி வருகிறார். ஆனால் நான் நிச்சயம் என்னுடைய திறமையை உள்ளூர் போட்டிகளில் வெளிப்படுத்தி டி20 வாய்ப்பை விரைவில் பெறுவேன் என்று ரெய்னா கூறினார்.

Raina

மேலும் இந்திய அணியில் நான்காம் இடத்தில் இறங்கி நான் இந்திய அணிக்காக பேட்டிங் செய்ய காத்திருக்கிறேன் என்றும் ரெய்னா கூறினார். மேலும் இந்த இரண்டு உலக கோப்பை தொடரிலும் இந்திய அணி கோப்பையை கைப்பற்ற என்னால் முடிந்த சிறப்பான ஆட்டத்தை நான் நிச்சயம் வெளிப்படுத்துவேன் அதுவே என் இலக்கு என்று சுரேஷ் ரெய்னா உறுதியளித்தார்.

Advertisement