மீண்டும் கேப்டனாக களமிறங்கும் சுரேஷ் ரெய்னா. எந்த அணிக்கு தெரியுமா ? – விவரம் இதோ

Raina
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருந்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த இந்த தொடருக்காக சென்னை அணியுடன் பயணித்த ரெய்னா துபாய் சென்ற பின் இடையில் சில பிரச்சினைகள் காரணமாக இந்தியா திரும்பினார். சுரேஷ் ரெய்னா அணியில் இருந்து விலகியதற்கு பின்னர் சிஎஸ்கே பெரும் பின்னடைவு ஏற்பட்டது. ஏற்கனவே அந்த அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் விலகிய நிலையில் ரெய்னாவும் மனக்கசப்பு காரணமாக இந்தியா திரும்பியதால் சிஎஸ்கே அணிக்கு அது பெரும் இழப்பாக பார்க்கப்பட்டது.

Raina

- Advertisement -

மேலும் சில நாட்களிலேயே சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இருந்து சுரேஷ் ரெய்னா நீக்கப்பட்டதால் அவர் இனி சிஎஸ்கே அணிக்காக விளையாட மாட்டார் என்ற கருத்து பொதுவாக உலாவி வந்தது. அதனை தொடர்ந்து ரெய்னா மீண்டும் தான் சிஎஸ்கே அணிக்கு விளையாட விருப்பம் தெரிவித்தாலும் அவர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அழைக்கப்படவில்லை இதன் காரணமாக மீண்டும் சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியில் இடம்பெற மாட்டார் என்ற தகவல் வெளியாகி வந்தது.

அதுமட்டுமின்றி ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட சுரேஷ் ரெய்னா மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க என்ற சந்தேகம் பரவலாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அவைகளுக்கெல்லாம் விடை அளிக்கும் வகையாக அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை தவிர்த்து மற்ற போட்டிகளில் பங்கேற்பார் என்பது உறுதியாகி உள்ளது. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் ஓய்வை அறிவித்தார் இன்னும் சில மாதங்களில் வரவிருக்கும் சையது முஷ்டாக் அலி தொடரில் விளையாட இருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

Raina

இதன்படி தற்போது உத்தரப்பிரதேச மாநில கிரிக்கெட் அணிக்காக 2020 – 21 ஆம் ஆண்டிற்கான சையது முஷ்டாக் அலி தொடர்பாக அவர் விளையாட இருக்கிறேன் என்ற தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இதனால் சுரேஷ் ரெய்னாவின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தற்போது இந்தத் தொடரில் விளையாடவுள்ள இவர் மீண்டும் ஐபிஎல் போட்டிக்கு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் புதிதாக இணைய இருக்கும் இரண்டு அணிகளில் ஒன்றில் இவர் கேப்டனாக செயல்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

rainasuresh

ஆனால் இது குறித்த முழு தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் தற்போதைக்கு சுரேஷ் ரெய்னா மீண்டும் சையது முஷ்டாக் அலி தொடரில் உத்ரபிரதேஷ் அணிக்கு கேப்டனாக செயல்படுவார் என்று உறுதியாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement