மும்பை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்ட சுரேஷ் ரெய்னா. காரணம் இதுதான் – இந்தநேரத்தில் இது தேவையா ?

Raina
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரராக இருந்த சுரேஷ் ரெய்னா பல ஆண்டுகள் இந்திய அணிக்கு தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி தோனியுடன் சேர்ந்து தனது ஓய்வு முடிவை திடீரென அளித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் ஐபிஎல் தொடரில் மட்டும் தான் விளையாடுவதாக தெரிவித்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் சென்று மீண்டும் அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நாடு திரும்பினார்.

Raina

இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கும், வரப்போகும் சையது முஷ்டாக் அலி தொடரிலும் அவர் விளையாடுவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது மும்பை விமான நிலையத்திற்கு அருகே உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் மும்பை மாநகர போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெய்னா உட்பட சுமார் 34 பேரை இந்த சோதனையின்போது மும்பை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

- Advertisement -

இதில் பல பிரபலங்கள் சுரேஷ் ரெய்னாவுடன் இருந்துள்ளனர். குறிப்பாக பாடகர் குறு ரந்த்வானா மற்றும் பாலிவுட் பிரபலம் உசேன் கானும் இந்த சோதனையில் கைதாகி உள்ளனர். அதாவது இந்தக் கைதுக்கு காரணம் யாதெனில் அரசு அனுமதித்த நேரத்தையும் கடந்து கேளிக்கை விடுதியில் அவர்கள் நேரத்தை செலவிட்டதாக அங்கு நடைபெற்ற போலீசார் சோதனையின் போது அவர்கள் சிக்கியுள்ளனர்.

Raina 1

தற்போது கொரோனா வைரஸ் உருமாறி அடுத்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வரும் இந்த வேளையில் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் இரவு நேர கேளிக்கை அரங்கில் இவர்கள் இருந்திருக்கின்றனர். மேலும் மும்பை மாநகர போலீசார் இரவு நேர ஊரடங்கை அறிவித்திருந்தும் இதேபோன்று இரவு நேர கேளிக்கை விடுதிகள் அரசாங்க விதிமுறையை மீறி செயல்படுவதாக வந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில் இவர்கள் சிக்கியுள்ளனர்.

rainasuresh

இந்த கேளிக்கை விடுதியில் கைதானவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 188 மற்றும் 34 உள்ளிட்ட மூன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதிகாலை 3 மணி அளவில் கைதான சுரேஷ் ரெய்னா பின்னர் ஆறு மணி அளவில் ஜாமினில் வெளியேறியதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement