பிடிக்க வாய்ப்பே இல்லாத கேட்சை சூப்பர்மேன் போன்று பறந்து பிடித்த கோலி – வைரலாகும் வீடியோ

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நேற்று திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய அணி 170 ரன்கள் குவித்தும் வெற்றியை தவறவிட்டது. இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இந்திய அணியின் மோசமான பீல்டிங் காரணமாக அமைந்தது.

- Advertisement -

எளிதாக வந்த கேட்சை சுந்தர், பண்ட் மற்றும் ஜடேஜா என அனைவரும் கோட்டை விட்டனர். இந்த எளிதான கேட்ச்களை கோட்டை விட்டதன் மூலம் இந்திய அணி வெற்றியையும் தவறவிட்டது என்று கோலி ஆட்டத்திற்கு பிறகு பேட்டியில் கூட தெரிவித்து இருந்தார். இந்நிலையில் நேற்று பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த விராட் கோலி பிடித்த ஒரு அற்புதமான கேட்ச் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹெட்மயர் அடித்த அந்த பந்து கிட்டத்தட்ட சிக்சருக்கு சென்றது ஆனால் அதனை பவுண்டரி லைனில் இருந்த கோலி பறந்து சென்று பிடித்து அசத்தினார். கிட்டத்தட்ட பிடிக்க முடியாத நிலையில் இருந்தும் அதனை கோலி அபாரமாக பறந்து பிடித்தது ரசிகர்களின் ஆரவாரத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement