சூப்பர் மேனாக மாறிய கோலி. ஒற்றை கையில் கேட்ச் பிடித்து அசத்தல்

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

இந்தத் தொடரின் முடிவை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மதியம் ஒன்று 1.30 மணிக்கு துவங்கியது. இரு அணிகளுக்கும் சம பலம் வாய்ந்த அணி என்பதால் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

- Advertisement -

அதன்படி தற்போது ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. வார்னர் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பிறகு ஸ்மித்தின் தவறான அழைப்பினால் பின்ச் 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தற்போது வரை ஆஸ்திரேலிய அணி 40 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்களை அடித்துள்ளது.

இந்த போட்டியில் 4 ஆவது வீரராக களமிறங்கிய லாபுஷேன் ஒருநாள் போட்களில் தனது முதலாவது அரைசதத்தை பூர்த்தி செய்து 54 ரன்களில் விராட் கோலியின் அபாரமான கேட்ச் மூலம் ஆட்டமிழந்து வெளியேறினார். கவர் திசையில் இருந்த கோலி பாய்ந்து ஒற்றை கையால் கேட்ச் பிடித்து அசத்தினார். கோலியின் அபாரமான இந்த கேட்ச் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement