பதான் அதிரடியில் ஹைதராபாத் த்ரில் வெற்றி…ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது டெல்லி ..!

- Advertisement -

ஐபில் போட்டியின் 36 வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது.இந்த போட்டியில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடியில் 164 ரன்களை எடுத்து. அந்த அணியின் முதலில் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர் பிரிதிவ் ஷா அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 65 ரன்களை குவித்தார்.
stanlake

இந்த போட்டியில் வழக்கம் போல அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் நிதானமான ஆட்டத்தை விளையாடி 36 பந்துகளில் 44 ரன்களை எடுத்து அணியின் ரன்களை சற்று உயர்த்த உதவினார். பின்னர் அவரும் சித்தார்த் வீசிய பந்தில் தவானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

- Advertisement -

பின்னர் அடுத்தடுத்து களமிறங்கிய டெல்லி வீரர்கள் அனைவரும் ஒற்றை படை எண்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் 164 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி சிறப்பான தொடக்கத்தை வெளிப்படுத்தியது. அன்டகனியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஹேல்ஸ் மற்றும் தவான் சிறப்பான தொடக்கத்தி கொடுத்தனர். பின்னர் இருவரும் அமித் மிஸ்ரா வீசிய பந்தில் ஆட்டமிழந்தனர்.
delhi

இருப்பினும் அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் யூசப் பதான் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். கேன் வில்லியம்சன் 32 ரன்களும் யூசப் பதான் 27 ரன்களும் எடுத்து கடைசி வரை ,ஆட்டமிழக்காமல் இருந்து அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்தனர். இந்த போட்டியின் தோல்வியின் மூலம் ஐபில் போட்டியில் தொடரும் வாய்ப்பை இழந்தது டெல்லி அணி.

Advertisement