டேவிட் வார்னருக்கு பதிலாக ஐபிஎல்-இல் ஹைதராபாத் அணிக்காக களமிறங்கப்போகும் மாற்று வீரர் யார் தெரியுமா.ஹைதராபாத் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த டேவிட் வார்னர் தென்ஆப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் பந்தை சேதப்படுத்தியதன் காரணமாக இந்த ஐபிஎல்-இல் இருந்து விலக்கப்பட்டார்.
Breaking news: Alex Hales, the hard hitting English batsman has joined the #OrangeArmy ! pic.twitter.com/6j4kuSCuXa
— SunRisers Hyderabad (@SunRisers) March 31, 2018
அவருக்கு பதிலாக மாற்றுவீரர் களமிறக்கப்படுவார் என ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்திருந்தார்.இந்நிலையில் இதே பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த ஸ்டீவன் ஸ்மித்திற்கு பதிலாக மாற்று வீரராக நியூசிலாந்து அணியை சேர்ந்த கேன் வில்லியம்சன் உடனடியாக நியமிக்கப்பட்டார்.
இருப்பினும் ஹைதராபாத் அணி தரப்பில் மாற்றுவீரர் அறிவிக்கப்படாமலே வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று ஹைதராபாத் அணிக்காக டேவிட் வார்னருக்கு பதிலாக இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸை ஹைதராபாத் நிர்வாகம் தற்போது ஒப்பந்தம் செய்துள்ளது.
ஐபிஎல்-இல் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மனான அலெக்ஸ் ஹேல்ஸ் இதுவரை 174 டி20 போட்டிகளில் விளையாடி 4704 ரன்களை குவித்துள்ளார்.இதில் இரண்டு சதங்களும் 30 அரை சதங்களும் அடங்கும்.டேவிட் வார்னருக்கு இணையான மற்றொரு சிறந்த வீரரை ஹைதராபாத் அணி ஒப்பந்தம் செய்துள்ளதால் ஹைதராபாத் அணி ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியடைந்துள்ளனர்.