ஐசிசி டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணியினர் அமெரிக்காவில் தயாராகி வருகின்றனர். முன்னதாக இத்தொடருக்காக ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் நடராஜன் இடம் பெறாதது தமிழக ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதே போல ரிங்கு சிங் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் மட்டுமே தேர்வானது பல முன்னாள் வீரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
கடந்த ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடி இந்தியாவுக்காக அறிமுகமான அவர் தோனிக்கு பின் அடுத்த ஃபினிஷர் கிடைத்து விட்டார் என்று ரசிகர்கள் பாராட்டும் அளவுக்கு அசத்தலாக செயல்பட்டார். இருப்பினும் 2024 ஐபிஎல் தொடரில் நல்ல ஃபார்மில் பெரிய ரன்கள் எடுக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அவரை தேர்வுக்குழு கழற்றி விட்டது. மறுபுறம் அதே ஐபிஎல் தொடரில் சுமாராக விளையாடிய ஹர்திக் பாண்டியா மும்பையின் தோல்விக்கு காரணமாக அமைந்தார்.
தவறான செலக்சன்:
ஆனால் அவர் துணைக் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக சுமாரான ஃபார்மில் இருந்தாலும் பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் சமநிலையை ஏற்படுத்தக்கூடிய வீரர் என்ற ஒரே காரணத்தால் பாண்டியா தேர்வாகியுள்ளார் என்றே சொல்லலாம். இந்நிலையில் ஹர்திக் பாண்டியா தேர்வால் தான் சமநிலை சீர்குலைந்துள்ளதாக தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர் மற்றும் இந்திய அணியின் முன்னாள் மேலாளர் சுனில் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 4 ஸ்பின்னர்கள் தேர்வு செய்யப்பட்டது அதிகப்படியானது என்றும் அவர் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியா ஒரு சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டரை தேர்வு செய்திருக்கலாம். அக்சர் படேலுக்கு பதிலாக ரிங்கு சிங் துணை கேப்டன் ஹர்டிக் பாண்டியாவுக்கு பதிலாக கலீல் அகமது தேர்வு செய்யப்பட்டிருந்தால் இந்திய அணியின் பேலன்ஸ் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்”
“ஏனெனில் நியூயார்க் நகரில் 2 மணிகட்டு ஸ்பின்னர்கள் ஒன்றாக விளையாடுவதற்கு வழியில்லை. அங்குள்ள மைதானம் நேராக 55 மீட்டர் தூரத்தை மட்டுமே கொண்டிருக்கும். பிட்ச் தற்காலிகமாக வைக்கப்பட்டிருக்கும். எனவே பாகிஸ்தானுக்கு எதிராக ஜடேஜாவை ஒரு ஸ்பின்னராக இந்தியா பயன்படுத்தலாம்”
இதையும் படிங்க: எத்தனை சூப்பர்ஸ்டார் இருந்தாலும் பயனில்லை.. டி20 உ.கோ ஜெயிக்க டிராவிட் இதை செய்யனும்.. லாரா அட்வைஸ்
“யார்க்கர் பந்துகளை வீசக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்களை அதிகமாக தேர்வு செய்ய வேண்டும். பாண்டியாவால் 4 ஓவர்களை வீச முடியாமல் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் அடி வாங்கினால் மட்டுமே சஹால் – குல்தீப் சேர்ந்தார் போல் விளையாடும் சூழ்நிலை ஏற்படலாம். வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் போட்டிகளில் ஜெய்ஸ்வாலை நீக்கிவிட்டு விராட் – ரோஹித்தை ஓப்பனிங்கில் களமிறக்கினால் மட்டுமே அதை செய்ய முடியும். ஆனால் அதை அவர்கள் செய்ய மாட்டார்கள் என்று கூறினார். ஏனெனில் எச்சரிக்கையாக



