இப்பொல்லாம் அது தான் அதிகமா பிடிக்குது.. டெல்லியை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்ற நரேன் பேட்டி

Sunil Narine 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஏப்ரல் மூன்றாம் தேதி நடைபெற்ற 16வது லீக் போட்டியில் டெல்லியை 106 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா தோற்கடித்தது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 272/2 ரன்கள் எடுத்தது. அதனால் ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்த அந்த அணிக்கு அதிகபட்சமாக சுனில் நரேன் 85 (39), ரகுவன்ஷி 54 (27), ரசல் 41 (19), ரிங்கு 26 (8) ரன்கள் குவித்தனர்.

டெல்லி சார்பில் அதிகபட்சமாக இஷாந்த் சர்மா 2, அன்றிச் நோர்ட்ஜே 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 273 ரன்களை துரத்திய டெல்லிக்கு பிரித்திவி ஷா 18, டேவிட் வார்னர் 10, மிட்சேல் மார்ஷ் 0, அக்சர் படேல் 0 உள்ளிட்ட முக்கிய வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

மிரட்டல் நாயகன்:
அதனால் கேப்டன் ரிசப் பண்ட் 55 (25), ட்ரிஷன் ஸ்டப்ஸ் 54 (32) ரன்கள் எடுத்துப் போராடியும் 17.2 ஓவரில் 166 ரன்கள் மட்டுமே எடுத்த டெல்லி பரிதாபமாக தோற்றது. அந்தளவுக்கு பந்து வீச்சிலும் அசத்திய கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 3, வைபவ் அரோரா 3, ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதனால் 3 போட்டிகளில் 3 வெற்றிகளைப் பெற்ற கொல்கத்தா புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியது.

இந்த வெற்றிக்கு பேட்டிங்கில் 7 பவுண்டரி 7 சிக்சருடன் 85 (39) ரன்கள் பந்துவீச்சில் ஒரு விக்கெட் எடுத்து அசத்திய சுனில் நரேன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். சொல்லப்போனால் கடந்த போட்டியிலும் ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் இந்த போட்டியில் தன்னுடைய அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைத்தார். இந்நிலையில் பவுலிங்கை விட பேட்டிங் தான் தமக்கு மிகவும் பிடித்துள்ளது என்று தெரிவிக்கும் நரேன் இது பற்றி போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

கிரிக்கெட் என்பது பேட்டிங்கை பற்றியதாகும். எனவே பேட்டிங்கில் பங்காற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. அதே சமயம் என்னுடைய பந்து வீச்சையும் நான் ரசிக்கிறேன். அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியில் எங்களிடம் போதுமான பேட்ஸ்மேன்கள் இருப்பதால் நான் அங்கே ஓப்பனிங்கில் களமிறங்குவதற்கான தேவை ஏற்படவில்லை”

இதையும் படிங்க: ரொம்ப தேங்க்ஸ் சார்.. காட்டடி மன்னன் ரசலை குப்புற விழவைத்த இஷாந்த் சர்மா.. ரசிகர்கள் நன்றி

“எனவே நாள் முடிவில் அணிக்கு என்ன தேவைப்படுகிறது என்பது முக்கியம். பில் சால்ட்டுடன் பேட்டிங் செய்வது நன்றாக இருக்கிறது. அவர் என்னுடைய அழுத்தத்தை எதிர்ப்புறம் குறைக்கிறார். இது போன்ற நல்ல பிட்ச்சில் பந்து வீச்சிலும் நன்றாகவே செயல்பட்டோம். எனவே இன்றிரவு எங்கள் மொத்த அணியும் வெற்றிக்காக நல்ல முயற்சியை கொடுத்தது” என்று கூறினார்.

Advertisement