
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 28ஆம் தேதி டெல்லியில் 48வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டெல்லியை அதன் சொந்த மண்ணில் கொல்கத்தா 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா 205 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ரகுவன்சி 44, ரிங்கு சிங் 36, சுனில் நரைன் 27 ரன்கள் எடுத்தார்கள்.
டெல்லி அணிக்கு அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக விளையாடிய டெல்லி அணிக்கு டு பிளேஸிஸ் 62, கேப்டன் அக்சர் படேல் 43 ரன்கள் எடுத்து வெற்றிக்கு போராடினார்கள். ஆனால் அப்போது அவர்களை தக்க நேரத்தில் அவுட் செய்த சுனில் நரைன் நம்பிக்கை நட்சத்திரம் கேஎல் ராகுலை 7 ரன்னில் ரன் அவுட்டாக்கினார்.
இறுதியில் விப்ராஜ் நிகாம் 38 ரன்கள் எடுத்ததை தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்கத் தவறினார்கள். அதனால் 20 ஓவரில் 190/9 டெல்லியை ரன்களுக்கு கட்டுப்படுத்தி சென்ற கொல்கத்தாவுக்கு அதிகபட்சமாக சுனில் நரைன் 3 விக்கெட்டுகளை எடுத்தார். இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி ஆல் ரவுண்டராக முக்கிய பங்காற்றிய நரைன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் அடிக்கடி ரன் அவுட் செய்யும் அளவுக்கு தாம் நல்ல ஃபீல்டர் இல்லையென்றாலும் ராகுலை தக்க சமயத்தில் ரன் அவுட்டாக்கியது மகிழ்ச்சியளிப்பதாக நரைன் கூறியுள்ளார். மேலும் அழுத்தமான சமயத்தில் கேப்டன் தம்மிடம் பவுலிங் கொடுப்பதாக அவர் கூறியுள்ளார். அப்படி கேப்டனின் நம்பிக்கையை பெற கடினமாக உழைக்க வேண்டும் என்று கூறும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“இது முழுமையாக அணியின் முயற்சி. நாங்கள் மிடில் ஓவர்களில் நன்றாக செயல்பட்டோம். ரகுவன்சி, ரிங்கு பேட்டிங்கில் அசத்தினார்கள். பின்னடைவைச் சந்தித்தாலும் அதிலிருந்து கம்பேக் கொடுத்து அணியின் வெற்றிகளில் பங்காற்ற எனக்கு நானே ஆதரவு கொடுக்கிறேன். நீங்கள் தடுமாறினாலும் நன்றாக முடிக்கக்கூடிய போட்டிகள் இருக்கும்”
இதையும் படிங்க: 2 விக்கெட்ஸ் 38 ரன்ஸ்.. விப்ராஜ் ஸ்பெஷல் சாதனை போராட்டம் வீண்.. டெல்லியை மடக்கிய கொல்கத்தா வெற்றி
“நான் எடுத்த அனைத்து விக்கெட்டுகளையும் என்ஜாய் செய்தேன். நான் கிரேட்டஸ்ட் ஃபீல்டர் கிடையாது. இருப்பினும் வாய்ப்பு கிடைக்கும் போது ரன் அவுட் செய்வது எப்போதும் நல்லது. அதற்கு முடிந்தளவுக்கு வேகமாக பந்தை சுழற்றி தூக்கி எறிய வேண்டும். சுயமான பெருமையைக் கொண்டுள்ளேன். அழுத்தமான சூழ்நிலையில் கேப்டன் உங்களை நம்பி பவுலிங் செய்யும் வாய்ப்பைக் கொடுப்பதற்கான நம்பிக்கையை நீங்கள் ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட வீரராக நீங்கள் இருக்க வேண்டுமெனில் பயிற்சிகள் இல்லாத நேரத்திலும் கடினமாக உழைக்க வேண்டும்” என்று கூறினார்.