- Advertisement -
ஆசிய கோப்பை

சூரியகுமார் தனது இடத்தை தியாகம் பண்ணி அவரை ப்ரமோட் பண்ணனும்.. பும்ரா ஓய்வெடுக்கனும்.. கவாஸ்கர் அட்வைஸ்

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களுடைய முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றது. அதனால் ஓமனுக்கு எதிரான கடைசிப் போட்டிக்கு முன்பாகவே இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்று அசத்தியது. இதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய கடைசிப் போட்டியில் செப்டம்பர் 19ஆம் தேதி ஓமன் அணியை எதிர்கொள்கிறது.

அந்தப் போட்டியிலும் கத்துக்குட்டியான ஓமன் அணியை தோற்கடித்து இந்தியா எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் ஓமன் அணி ஏற்கனவே தங்களுடைய முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து லீக் சுற்றுடன் வெளியேறிவிட்டது. எனவே இந்தியாவுக்கு எதிராக அசாத்தியமான ஆறுதல் வெற்றியைப் பெற ஓமன் அணியும் முயற்சிக்க உள்ளது.

- Advertisement -

பும்ராவுக்கு ரெஸ்ட்:

இந்நிலையில் ஓமன் போன்ற சிறிய அணிக்கு எதிராக இந்தியா ஜஸ்ப்ரித் பும்ராவை விளையாட வைக்காமல் பெஞ்சில் அமர வைக்க வேண்டும் என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார். ஏனெனில் செப்டம்பர் 28இல் நடைபெறும் ஃபைனலில் இந்தியா வெல்ல அவர் முக்கியம் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் சூரியகுமார் கேப்டனாக தனது இடத்தை தியாகம் செய்து சஞ்சு சாம்சனை 4வது விளையாட வைக்க வேண்டும் என்றும் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஜஸ்ப்ரித் பும்ரா ஓய்வெடுக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். சொல்லப்போனால் பாகிஸ்தானுக்கு எதிரான கடந்தப் போட்டியிலேயே அவர் ஓய்வெடுத்திருக்க வேண்டும். அப்போது தான் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பெரியப் போட்டிக்கு அவர் தயாராக இருப்பார். அதையே இந்தியாவும் செய்யப் பார்க்க வேண்டும்”

- Advertisement -

கவாஸ்கர் அட்வைஸ்:

“அதற்காக பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஒரு வீரர் சேர்க்கப்பட வேண்டிய சூழ்நிலை வரும். ஆனால் ஓமன் போட்டியில் பும்ரா கண்டிப்பாக விளையாடக்கூடாது. அத்துடன் இந்தியா அதே ஓபனிங் ஜோடியுடன் முதலில் பேட்டிங் செய்வதை நான் விரும்புகிறேன். மேலும் கேப்டன் சூரியகுமார் தன்னைத் தானே கீழே விளையாட வைத்து 3வது இடத்தில் திலக் வர்மா போன்றவருக்கு களத்தில் அதிக நேரம் விளையாடும் வாய்ப்பைக் கொடுக்கலாம்”

இதையும் படிங்க: விக்கெட் எடுக்கலனா எனக்கு வாய்ப்பு கிடையாது.. இதான் உண்மை.. தனது வாய்ப்பு குறித்து – குல்தீப் யாதவ் வெளிப்படை

“அதே போல சஞ்சு சாம்சனுக்கும் பேட்டிங் செய்யும் வாய்ப்பைக் கொடுக்க வேண்டும். அது பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வாய்ப்பைப் பெறாத பேட்ஸ்மேன்கள் பயிற்சி எடுக்க உதவும். அத்துடன் சூப்பர் 4 சுற்றில் வங்கதேசம், இலங்கை போன்ற அணிகளை எதிர்கொள்ளத் தயாராக உதவும். அவை அனைத்தும் பவுலர்களை காட்டிலும் பேட்ஸ்மேன்களுக்கு தயாராகும் வாய்ப்பைக் கொடுக்கும் விதமாகும்” என்று கூறினார்.

- Advertisement -