- Advertisement -
இந்திய கிரிக்கெட்

குழப்பமா இருக்கு.. இந்தியர் என்பதால் தன்னை அவமானப்படுத்திய ஆஸ்திரேலியா.. மீது கவாஸ்கர் அதிருப்தி

ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு மாதமாக நடைபெற்று வந்த 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை நிறைவு பெற்றுள்ளது. அத்தொடரில் சுமாராக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணியை 3 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. அதன் காரணமாக 10 வருடங்கள் கழித்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்ல முடியாமல் இந்தியா ஏமாற்றத்தை சந்தித்தது.

அது போக 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இந்தியா நழுவ விட்டது. அந்த வகையில் நட்சத்திர வீரர்கள் இருந்தும் சுமாராக விளையாடியதால் இந்தியா தோற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. முன்னதாக அந்த தொடரின் கோப்பையை முன்னாள் வீரர்கள் ஆலன் பார்டர் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோர் வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இந்தியர் என்பதால்:

ஆனால் கடைசி நேரத்தில் சுனில் கவாஸ்கரை மட்டும் கழற்றி விட்ட ஆஸ்திரேலிய வாரியம் ஆலன் பார்டர் கைகளால் கோப்பையை தங்களுடைய அணிக்கு கொடுத்து அழகு பார்த்தது. அந்த வகையில் சுனில் கவாஸ்கரை ஆஸ்திரேலிய வாரியம் அவமானப்படுத்தியது என்றே சொல்லலாம். இந்நிலையில் இந்த நிகழ்வு தமக்கு குழப்பத்தை கொடுப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி கோட் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “கோப்பை பரிசளிக்கும் நிகழ்வில் நானும் இருந்திருக்க விரும்புகிறேன். அனைத்தையும் தாண்டி இது பார்டர் – கவாஸ்கர் கோப்பை. ஆஸ்திரேலியா – இந்தியாவை பொறுத்தது. அதாவது நான் களத்தில் தான் இருந்தேன். என்னைப் பொறுத்த வரை ஆஸ்திரேலியா வென்றது ஒரு பொருட்டல்ல”

- Advertisement -

கவாஸ்கர் ஆதங்கம்:

“ஏனெனில் அவர்கள் நம்மை விட சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வென்றார்கள். எனவே அது பரவாயில்லை. ஆனால் நான் இந்தியன் என்பதால் அங்கே என்னால் கோப்பையை பரிசாக கொடுக்க முடியவில்லை. உண்மையில் என்னுடைய நண்பர் ஆலன் பார்டர் அவர்களுடன் சேர்ந்து கோப்பையை கொடுத்திருந்தால் நான் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன்”

இதையும் படிங்க: வெற்றி பெற வாய்ப்பிருந்தும் தோல்வியை சந்தித்த இந்திய அணி.. அவர் இருந்திருந்தா இப்படி நடந்திருக்காது – விவரம் இதோ

“ஆனால் இந்த போட்டி துவங்கிய போது ஒருவேளை இந்தியா டிரா அல்லது வெற்றியை பெறாவிட்டால் கோப்பையை பரிசளிக்க நீங்கள் தேவையில்லை என்று என்னிடம் சொன்னார்கள். அதற்காக நான் சோகமாக இல்லை. ஆனால் கொஞ்சம் குழப்பமாக உள்ளேன். ஏனெனில் இந்த கோப்பையின் பெயர் பார்டர் – கவாஸ்கர். எனவே நாங்கள் இருவரும் சேர்ந்து அந்த கோப்பையை கொடுத்திருக்கலாம்” என்று ஆதங்கத்துடன் கூறினார்.

- Advertisement -