சஞ்சு சாம்சனின் சொதப்பலுக்கு காரணமே இதுதான்.. அதை சரி பண்ண இதை செய்ஞ்சா போதும் – கவாஸ்கர் அட்வைஸ்

Gavaskar and Samson
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது நடப்பு 2026 டி20 உலக கோப்பை தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் நமீபியா அணியை எதிர்த்து விளையாடியிருந்தது. டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தாலும் இந்திய அணியின் துவக்க வீரராக விளையாடிய சஞ்சு சாம்சனின் ஆட்டம் பெரியளவில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

சஞ்சு சாம்சன் செய்யும் தவறு இதுதான் : சுனில் கவாஸ்கர்

ஏனெனில் சஞ்சு சாம்சன் திறமையான வீரராக இருந்தாலும் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் சொதப்பலாக செயல்பட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக இந்த டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நியூஸிலாந்து தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் முதன்மை துவக்க வீரருக்கான இடத்தை இழந்தார். இந்நிலையில் அபிஷேக் சர்மாவுக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு மீண்டும் துவக்க வீரருக்கான வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

இப்படி சிறிய அணிக்கு எதிராக கிடைத்த வாய்ப்பிலாவது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த போட்டியிலும் 8 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது இந்த மோசமான செயல்பாடு பலரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சஞ்சு சாம்சன் இப்படி தொடர்ச்சியாக தடுமாற என்ன காரணம்? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : சஞ்சு சாம்சன் தற்போது டெக்னிக்கலாக சில தவறுகளை செய்து வருகிறார். குறிப்பாக கிரீசுக்கு மிகவும் அருகில் உள்ளே சென்று பிளிக் அடிக்கிறார். அப்படி அடிக்கும் போது இடைவெளிகளில் சென்றால் நிச்சயம் சிக்ஸர் சென்றுவிடும். அதே வேளையில் மைதானத்தின் எல்லைகள் தூரமாக இருந்தால் அது கேட்ச்க்கு தான் செல்லும்.

- Advertisement -

இதையும் படிங்க : ஜடேஜா இல்லை.. ஜெய்ஸ்வால் இல்லை.. 2026 ராஜஸ்தான் அணியின் கேப்டன் இவர்தான் – வெளியான அறிவிப்பு

மேலும் அவர் விளையாடும் போது தனது பின் காலை நகர்த்தி சமநிலையின்றி விளையாடுகிறார். அப்படி பந்து வீசுவதற்கு முன்னதாகவே கால்நகர்வை முன்கூட்டியே செய்யக்கூடாது. இது போன்ற ஒரு சில சின்ன சின்ன விடயங்களை அவர் மாற்றிக் கொண்டால் நிச்சயம் நம்பிக்கை பெற்று நல்ல ஒரு இன்னிங்ஸ்ஸை விளையாடுவார் என்று சுனில் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement