இவரை 5 ஆவது பவுலராக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது – கிழித்து தொங்கவிட்ட சுனில் கவாஸ்கர்

Gavaskar

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பான இந்த போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் குவித்தும் இங்கிலாந்து அணியிடம் தோல்வி கண்டது. இங்கிலாந்து அணி வீரர்கள் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை சரமாரியாக அடித்து ரன்களை சேர்த்தனர். 337 ரன்களை அவர்கள் 43.3 ஓவர்களில் சேசிங் செய்து வெற்றி பெற்று தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரில் ஹார்திக் பாண்டியா இதுவரை பந்து வீசாதது விமர்சனத்தை கொண்டுவந்துள்ளது. ஏனெனில் 5 பந்துவீச்சாளர்கள் மட்டும் வைத்து விளையாடுவது கடினம் என்றும் அதனால் ஆறாவது பந்துவீச்சாளர் சில ஓவர்கள் வீச வேண்டும் என்றும் பலர் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

ஏனெனில் தற்போது ஆல்-ரவுண்டராக விளையாடி வரும் க்ருனால் பாண்டியா நேற்றைய போட்டியில் 6 ஓவர்கள் வீசி 72 ரன்கள் விட்டுக்கொடுத்து பெரிய அளவில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறுகையில் : இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சை பென் ஸ்டோக்ஸ் கிழித்து தொங்க விட்டார். இந்திய அணி பந்துவீச்சில் கொஞ்சம் பலவீனமாக இருந்தது என்று நான் கூறுவேன்.

ஏனெனில் நேற்றைய போட்டியில் க்ருனால் பாண்டியாவை என்னால் 5வது பந்து வீச்சாளராக ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் 10 ஓவர் வீசும் பவுலராக இருக்க முடியாது. இது போன்ற ஆடுகளங்களில் சாகல் போன்ற ஒரு பந்து வீச்சாளர் தேவை. அப்படி இல்லை என்றால் ஹார்டிக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியா ஆகிய இருவரும் இணைந்து 10 ஓவர்களை வீசி அனுமதித்து இருக்கலாம் .அது தான் சரி மற்றபடி க்ருனால் பாண்டியாவை 5வது பந்து வீச்சாளராக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சுனில் கவாஸ்கர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

- Advertisement -

pandya

மேலும் அடுத்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமென்றால் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது பந்துவீச்சாளர்கள் பற்றி அதிகமாக யோசிக்க வேண்டும் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.