- Advertisement -
ஐ.பி.எல்

2027 ஐ.பி.எல் தொடரில் நிச்சயம் இந்த விடயத்தில் பல மாற்றங்கள் நடக்கும் – சுனில் கவாஸ்கர் கருத்து

இந்தியாவில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி துவங்கிய 2026-ஆம் ஆண்டிற்கான 19-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது மே 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இந்த மாபெரும் தொடரின் இறுதிப்போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின.

அடுத்த ஆண்டு நிச்சயம் இது நடக்கும் : சுனில் கவாஸ்கர்

அப்படி நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய குஜராத் அணி 155 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய ஆர்.சி.பி அணி 18 ஓவர்களில் அந்த இலக்கினை சேசிங் செய்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. அதோடு நடப்பு சாம்பியனாக இந்த தொடரில் பங்கேற்ற அவர்கள் மீண்டும் கோப்பையை தக்க வைத்து அடுத்தடுத்த சாம்பியன் பட்டத்தை வென்று சி.எஸ்.கே மற்றும் மும்பை ஆகிய அணிகளின் சாதனையை சமன் செய்திருந்தனர்.

- Advertisement -

இவ்வேளையில் இந்த ஐ.பி.எல் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர அணிகளான சி.எஸ்.கே, மும்பை, லக்னோ, டெல்லி போன்ற அணிகள் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் பெரிய பின்னடைவை சந்தித்து வெளியேறினார். இதன் காரணமாக அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிலும் குறிப்பாக பல்வேறு அணிகளில் கேப்டன் மாற்றங்கள் நடைபெறும் என்று இந்தியாவின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : அடுத்த ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக நிச்சயம் பல அணிகளின் கேப்டன் மாற்றம் நடைபெறும் என்று நினைக்கிறேன். அதோடு ஐ.பி.எல் போட்டிகளின் போது அணிகளின் வெற்றிக்கு பயிற்சியாளர் குழுவும் மிக முக்கிய பங்கினை வகிக்கின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க : அண்ணன் தம்பிக்கு இடையே நீடிக்கும் மனக்கசப்பு.. ஆர்.சி.பி வெற்றிக்கு பிறகு – தெரிந்த உண்மை

அதனால் அவர்களது விடயத்திலும் அதிக மாற்றங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். லக்னோ அணியை பொறுத்தவரை ரிஷப் பண்ட் தானாக முன்வந்து கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேறினார். இது முதல் மாற்றம்தான் ஆனால் அடுத்த சீசனுக்கு முன்னதாக இது போன்று பல்வேறு கேப்டன் மாற்றங்கள் ஏற்படும் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -