- Advertisement -
ஆசிய கோப்பை

பும்ராவுக்கு இந்த விடயம் பிரச்சனையா இருக்காது.. அவர் கண்டிப்பா எல்லா மேட்சும் ஆடலாம் – கவாஸ்கர் நம்பிக்கை

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக பந்துவீச்சு யூனிட்டை வழிநடத்த காத்திருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே அவர் காயத்திலிருந்து முழுமையாக மீண்டு வந்திருந்தாலும் பணிச்சுமையை காரணம் காட்டி முக்கிய போட்டிகளில் மட்டுமே விளையாட வைக்கப்பட்டு வருகிறார். அதோடு அவ்வப்போது அவருக்கு சில தொடர்களில் ஓய்வும் வழங்கப்பட்டு வருகிறது.

பும்ராவை பற்றி கவலை வேண்டாம் : சுனில் கவாஸ்கர்

அந்த வகையில் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் கூட 5 போட்டிகளில் அவருக்கு மூன்று போட்டியில் மட்டுமே விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. பணிச்சுமையை கருத்தில் கொண்டு இரண்டு போட்டிகளில் அவர் விளையாடவில்லை. இந்நிலையில் எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரிலாவது அவர் முழுமையாக விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் அப்படி எழுந்துள்ள ஒரு கேள்விக்கு பதிலளித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் : ஆசிய கோப்பை தொடரில் ஜஸ்ப்ரீத் பும்ராவின் பணிச்சுமை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் இந்த தொடரில் அவர் முழுவதுமாக விளையாடுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ஆசிய கோப்பை தொடரானது 20 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக நடைபெற இருக்கின்றன. இதன் காரணமாக ஒரு போட்டிக்கு 4 ஓவர்களை மட்டுமே பும்ரா வீசுவார். அதிலும் தொடர்ச்சியாக அவர் நான்கு ஓவர்களை வீசப்போவது கிடையாது. எனவே இந்த தொடரில் விளையாடுவதில் பும்ராவிற்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்று நினைக்கிறேன்.

- Advertisement -

அதோடு மட்டுமின்றி சரியான இடைவெளிகளில் போட்டிகள் நடைபெற இருப்பதினால் பணிச்சுமையையும் காரணம் காட்ட முடியாது. அந்த வகையில் பும்ரா எந்த ஒரு பிரச்சனையும் இன்றி இந்த தொடர் முழுவதும் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளதாக சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் :

இதையும் படிங்க : அவரை மாதிரி ஒரு பிளேயரை பிளேயிங் லெவன்ல இருந்து எப்படி தூக்க முடியும் – சுனில் கவாஸ்கர் கருத்து

தற்போதைய இந்திய அணியின் பேட்டிங் வரிசையை எட்டாம் நிலை வரை நீட்டிக்காமல் பந்துச்சாளர்களுக்கு முக்கியத்துவம் வழங்கி மூன்று வேகப்பந்து மற்றும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை இந்திய அணி விளையாட வைக்க வேண்டும் என சுனில் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -