அஷ்வினை டி20 உலகக்கோப்பை அணியில் சேர்த்தது எதற்காக தெரியுமா ? – சுனில் கவாஸ்கர் ஓபனடாக்

Gavaskar

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அதை தொடர்ந்து நேற்று செப்டம்பர் 10-ஆம் தேதி நடைபெற இருந்த கடைசி டெஸ்ட் போட்டியானது இந்திய நிர்வாகிகளிடையே பரவி வந்த கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

indvseng

இந்த டெஸ்ட் தொடரின் 4 போட்டிகளிலும் தமிழக வீரரான அஷ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பெரிய அளவில் விவாதங்கள் எழுந்தன. இந்நிலையில் இந்த கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறயிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

அதில் 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டி20 போட்டிகளில் விளையாட தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஷ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அஷ்வினின் இந்த கம்பேக்-க்கு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கர் வித்தியாசமான கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

ashwin-2

அஷ்வினுக்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைத்தது நல்ல செய்திதான். ஆனால் அவர் பிளேயிங் லெவனில் விளையாடுவது மிகவும் கஷ்டம். மேலும் அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா ? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு ஒரு வாய்ப்பு கூட கொடுக்கவில்லை எனவே அவரை ஆறுதல் படுத்தும் விதமாகவே இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கலாம் என்று தனது வித்தியாசமான கருத்தை கவாஸ்கர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement