இந்திய அணியின் ஷாட்டர் பார்மெட்டில் இனி இவருக்கு இடமில்லை – சுனில் கவாஸ்கர் கருத்து

Gavaskar
- Advertisement -

சமீபகாலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் ரவிஅஸ்வின மீண்டும் இந்தியா அணிக்காக ஒரு நாள் மற்றும் டி20 பார்மேட்களில் ஆடுவாரா என்று எல்லோருக்கும் ஒரு கேள்வி இருந்தது.111 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 150 விக்கெட்டுகளையும், 46 டி20 போட்டிகளில் விளையாடி 52 விக்கெட்டுகளையும் கைப்பற்றி நல்ல ரெகார்டை அஸ்வின் தனது கைவசம் வைத்து உள்ளார்.

Ashwin

இருப்பினும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அஷ்வின் இந்தியாவுக்காக விளையாடி 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் அஸ்வினுக்கு இனி லிமிடெட் பார்மெட்களில் வாய்ப்பு கிடைக்குமா கிடைக்காத என்ற கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக தற்பொழுது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் பதில் அளித்துள்ளார்.

- Advertisement -

அஸ்வின் தன்னை நாளுக்கு நாள் மெருகேற்றி கொண்டே போகிறார். இந்திய அணிக்கு அஸ்வின் கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம். டெஸ்ட் போட்டிகளில் சிறந்த முறையில் ஆடி வரும் அஸ்வின் இனி லிமிடெட் ஓவர் பார்மெட்களுக்கு செட் ஆவாரா என்று எல்லோருக்குள்ளும் கேள்வி இருக்கும்.ஆனால் என்னை பொறுத்த வரை அஸ்வின் இனி லிமிடெட் ஓவர் பார்மெட்களுக்கு செட் ஆவது என்பது சாத்தியமில்லை.

Ashwin

அவரால் இனி பழையபடி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் முன்பு போல் விளையாட முடியாது.அவருக்கான அந்த இடத்தை ஏற்கனவே ஹர்திக் பாண்ட்யா நிரப்பி விட்டார். மேலும் ஸ்பின் ஆல் ரவுண்டராக ஜடேஜா வேறு இருக்கிறார். எனவே அவர் இனி திரும்ப லிமிடெட் ஓவர் பார்மெட்களில் ஆடுவது என்பது முடியாத காரியம் ஆகும்.

Ashwin 3

இருப்பினும் இந்திய டெஸ்ட் அணியில் அவரது இடம் என்பது யாராலும் நிரப்ப முடியாத ஒன்றாக இருக்கிறது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்தது பல சாதனைகளை முறியடித்து வரும் அஷ்வின் இன்னும் 6 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடுவது உறுதி என்றும் கவாஸ்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement