36க்கு ஆல் அவுட்டான மேட்ச் மாதிரி.. இது கிடைச்சா ராசியான முதல் 2 டெஸ்டில் கோலி அசத்திடுவாரு.. கவாஸ்கர் நம்பிக்கை

- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை வரும் நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. அந்தத் தொடரில் விராட் கோலி சிறப்பாக செயல்படுவாரா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏனெனில் கடந்த நியூசிலாந்து தொடரில் இந்தியா தோல்வியை சந்திக்கும் அளவுக்கு அவர் சமீப காலங்களாகவே சுமாராக விளையாடி வருகிறார்.

இருப்பினும் ஆஸ்திரேலியாவில் கடந்த காலங்களில் விராட் கோலி சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி 50க்கும் மேற்பட்ட பேட்டிங் சராசரியை வைத்துள்ளார். அதனால் ஆஸ்திரேலியாவில் விராட் கோலி பெரிய ரன்கள் குவிப்பதற்கு போராடுவார் என்று சுனில் காவாஸ்கர் தெரிவித்துள்ளார். குறிப்பாக 2வது போட்டி நடைபெறும் அடிலெய்ட் மைதானம் விராட் கோலிக்கு மிகவும் ராசியான மைதானமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

கவாஸ்கர் நம்பிக்கை:

அதே போல முதல் போட்டி நடைபெறும் பெர்த் மைதானத்தில் 2018 – 19 தொடரில் விராட் கோலி சிறப்பான சதத்தை பதிவு செய்திருந்தார். எனவே அந்த 2 ராசியான மைதானங்களில் நடைபெறும் முதல் 2 போட்டிகளில் அதிர்ஷ்டம் இருந்தால் விராட் கோலி பெரிய ரன்கள் குவிப்பார் என்று கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“நியூசிலாந்துக்கு எதிராக ரன்கள் அடிக்காததால் ஆஸ்திரேலியாவில் அசத்துவதற்காக விராட் கோலி மிகுந்த பசியுடன் இருப்பார். அடிலெய்ட் மைதானத்தில் 36க்கு ஆல் அவுட்டான போட்டியில் கூட விராட் கோலி தன்னுடைய முதல் இன்னிங்ஸில் ரன் அவுட்டாவதற்கு முன்பாக 70+ ரன்கள் அடித்திருந்தார். அந்த மைதானத்தில் விராட் கோலி தொடர்ந்து சிறப்பாக விளையாடியுள்ளார். அது அவருக்கு மிகவும் பரிச்சயமான மைதானம்”

- Advertisement -

ராசியான ஆஸ்திரேலியா:

“அதற்கு முன்பாக முதல் போட்டி நடைபெறும் பெர்த் மைதானத்தில் 2018 – 19 தொடரில் விராட் கோலி ஒரு சிறப்பான சதத்தை பதிவு செய்திருந்தார். எனவே அந்த மைதானங்களில் ஏற்கனவே நன்றாக விளையாடியுள்ளது அவருக்கு எக்ஸ்ட்ரா தன்னம்பிக்கையை கொடுக்கும். கண்டிப்பாக உங்களுக்கு அந்த மைதானத்தில் ஆரம்பத்தில் விளையாடும் போது கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை”

இதையும் படிங்க:என்னோட கேரியர் முழுக்க போட்டியிட்ட அவர்கிட்ட நிறைய கத்துக்குகிறேன்.. இந்திய வீரரை பாராட்டிய லயன்

“எனவே அங்கே நல்ல துவக்கத்தை பெற்றால் கண்டிப்பாக அவரால் பெரிய ரன்களை குவிக்க முடியும்” என்று கூறினார். மொத்தத்தில் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் 13 போட்டிகளில் 1352 ரன்களை 54.08 என்ற சராசரியில் குவித்துள்ளார். அந்த அனுபவத்தை வைத்து இம்முறை ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றிக்கு விராட் கோலி போராடுவார் என்று நம்பலாம்.

Advertisement