இந்திய கிரிக்கெட் அணி கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக 3 – 0 (3) என்ற கணக்கில் தங்களது சொந்த மண்ணில் ஒய்ட்வாஸ் தோல்வியை சந்தித்தது. தற்போது நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் 2 – 0 (2) என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. அதன் வாயிலாக 25 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் தோற்றுள்ளது.
அத்துடன் 93 வருடங்களில் முதல் முறையாக அடுத்தடுத்த வருடங்களில் இந்தியா 2 டெஸ்ட் தொடர்களில் ஒயிட்வாஸ் தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்த தோல்விக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களை நன்றாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதை விட பயிற்சியாளர் கௌதம் கம்பீர் சோதனை என்ற பெயரில் அடிக்கடி செய்யும் மாற்றங்கள், தவறான தேர்வுகள் ஆகியவையும் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
அப்போ பாராட்டாதவங்க
அதனால் கௌதம் கம்பீர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக வேண்டுமென இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய கோப்பையை வென்ற போது கம்பீரை பாராட்டத்தவர்கள் இப்போது மட்டும் திட்டுவது ஏன்? என்று ஜாம்பவான் சுனில் காவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தோல்விக்கு கம்பீர் மட்டும் காரணமில்லை என்று தெரிவிக்கும் அவர் வெளிநாடுகளிலும் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் ஒரே பயிற்சியாளர் இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார். இது பற்றி கவாஸ்கர் பேசியது பின்வருமாறு. “கௌதம் கம்பீர் ஒரு பயிற்சியாளர். ஒரு பயிற்சியாளர் அணியை தயார்படுத்த மட்டுமே முடியும். களத்தில் விளையாடுபவர்கள் தான் நல்ல ஆட்டத்தைக் கொடுக்க வேண்டும்”
கவாஸ்கர் ஆதரவு:
“தோல்விக்கு கம்பீர் பொறுப்பேற்க வேண்டும் என்று கேட்பவர்களுக்கு என்னுடைய கேள்வி என்னவெனில், அவரது தலைமையில் இந்தியா ஆசியக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற போது நீங்கள் என்ன செய்தீர்கள்? அப்போது எதுவும் சொல்லாத நீங்கள் இப்போது பதவி நீக்கம் செய்ய சொல்கிறீர்கள்? அந்த 2 கோப்பைகளை இந்தியா வென்ற போது வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கம்பீரின் பதவி காலம் நீட்டிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் சொன்னீர்களா?
இதையும் படிங்க: கம்பீர் ஒழிக.. கௌகாத்தியில் ஒலித்த ரசிகர்கள் குரல்.. போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை.. நடந்தது என்ன?
“அதை சொல்லாத நீங்கள் அணி நன்றாக விளையாடாத போது மட்டும் பயிற்சியாளரை குறை சொல்கிறீர்கள். இங்கிலாந்தில் ப்ரெண்டன் மெக்கல்லம் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் பயிற்சியாளராக இருக்கிறார். அதே போல நிறைய வெளிநாடுகளில் ஒரே பயிற்சியாளர் இருக்கிறார்கள். ஆசியக் கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராபி வென்ற போது கம்பீருக்கு பாராட்டு கொடுக்க தயாராகாத நீங்கள் 22 யார்ட் களத்தில் இந்திய அணி நன்றாக விளையாடாத போது மட்டும் ஏன் குறை சொல்கிறீர்கள்?” என்று கூறினார்.



