ஐ.சி.சி கோப்பையை வெல்லவில்லை என்றாலும் விராட் கோலி பெஸ்ட் கேப்டன் தான்.. காரணத்தை கூறிய – சுனில் கவாஸ்கர்

Gavaskar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சமீபகாலமாகவே பேட்டிங் ஃபார்மின்றி தடுமாறி வந்த வேளையில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரானது அவருக்கு மிக முக்கியமான தொடராக பார்க்கப்பட்டது. இவ்வேளையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக நல்ல துவக்கம் கிடைத்தும் பெரிய ரன்களை அடிக்காத கோலி பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து சதம் அடித்ததோடு இந்திய அணியும் வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

விராட் கோலி மிகச்சிறந்த கேப்டன் தான் : சுனில் கவாஸ்கர்

அவரது இந்த ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்ற இந்திய அணியின் முக்கிய தூணாக இருப்பார் என்று பலரும் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் விராட் கோலி கேப்டனாக இருந்த போது நிகழ்த்திய சில சாதனைகளை முன்வைத்து அவருக்கு ஆதரவளித்து பேசியுள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : விராட் கோலி ஐசிசி தொடரை கைப்பற்றவில்லையே தவிர மற்றபடி அவர் சிறந்த கேப்டன் இல்லை என்று யாரும் சொல்லி விட முடியாது. ஏனெனில் அவரது தலைமையில் இரு தரப்பு தொடர்களை பார்க்கும்போது இந்திய அணி உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல போட்டிகளை வென்றுள்ளது.

விராட் கோலியின் தலைமையில் மிக அற்புதமான சாதனைகளும் வெளிநாட்டு மண்ணில் நிகழ்த்தப்பட்டுள்ளன. வேறு எந்த கேப்டனின் கீழும் இல்லாத அளவிற்கு இந்திய அணி அதிக போட்டிகளை விராட் கோலி தலைமையில் வென்றுள்ளது. ஆனாலும் அவர் ஒரு கேப்டனாக ஐசிசி கோப்பை வென்றிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

- Advertisement -

என்னை பொறுத்தவரை விராட் கோலி மிகச்சிறந்த கேப்டன். ஏனெனில் இருதரப்பு தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு தொடரை நீங்கள் வென்றால் கூட அது உலக கோப்பையை வென்றதற்கு சமமாகும். அதே போன்று டி20 போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு அணிக்கு எதிரான டி20 வென்றால் அதுவும் பெரிதான ஒரு வெற்றி என சொல்லலாம் என கவாஸ்கர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : அந்த பைத்தியக்காரனை எல்லாம் கேப்டனா போட்டா இப்படித்தான் ஆகும்.. முகமது ரிஸ்வானை கடிந்த – சோயிப் அக்தர்

இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்ற கேப்டனாக மகேந்திர சிங் தோனி 332 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி 178 வெற்றிகளுடன் முதலிடத்தில் இருக்கும் வேளையில் விராட் கோலி 213 போட்டிகளில் கேப்டனாக இந்திய அணியை பயன்படுத்தி 135 வெற்றிகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement