சுதர்சன், தாக்கூருக்கு பதிலாக அந்த 2 பேரை சேர்க்கனும்.. இந்தியா வெற்றி பெற கவாஸ்கர் ஆலோசனை

Sunil Gavaskar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஜூன் 20ஆம் தேதி துவங்கிய அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்கடித்தது. அதனால் இங்கிலாந்து தங்களுடைய சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை நிரூபித்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

மறுபுறம் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி எதிர்ப்பார்த்ததைப் போலவே முக்கிய நேரங்களில் சொதப்பி தோற்றது. குறிப்பாக பேட்டிங்கில் பெரிய ரன்கள் குவித்தும் லோயர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியது இந்தியாவுக்கு தோல்வியைக் கொடுத்தது. அதே போல ஜெய்ஸ்வால் உள்ளிட்ட ஃபீல்டர்கள் கேட்ச்களை தவற விட்டது இந்தியாவின் தோல்விக்கு வித்திட்டது.

- Advertisement -

தாக்கூர் வேண்டாம்:

இவற்றுடன் தனி ஒருவனாக போராடியாக ஜஸ்ப்ரித் பும்ராவை போல போல மற்ற பவுலர்கள் தாக்கத்தை ஏற்படுத்தாததும் இந்தியாவுக்கு பின்னடைவைக் கொடுத்து வருகிறது. இந்நிலையில் இரண்டாவது போட்டியிலும் சாய் சுதர்சன், கருண் நாயர் பெரிய ரன்கள் குவிக்கத் தவறினால் தற்காலிகமாக அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் சேர்த்துக் கொண்டுள்ளார்.

அத்துடன் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டிலுமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறும் சர்துள் தாக்கூருக்கு பதிலாக குல்தீப் யாதவ் 2வது போட்டியில் இந்திய அணிக்குள் வரவேண்டும் என்றும் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஜஸ்ப்ரித் பும்ரா ஃபிட்டாக இருக்கிறார் அல்லது இல்லை என்பதைத் தாண்டி குல்தீப் அணிக்குள் வரவேண்டும் என்று நான் நினைக்கிறேன்”

- Advertisement -

கவாஸ்கர் கருத்து

“சர்துல் தாக்கூருக்கு பதிலாக அவர் அணிக்குள் வரவேண்டும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் அடுத்த போட்டி நடைபெறும் பர்மிங்கம் பிட்ச் மணிக்கட்டு ஸ்பின்னருக்கு உதவி செய்யும். இரண்டாவது போட்டியிலும் விஷயங்கள் சரியாக செல்லவில்லையெனில் சாய் சுதர்சன் அல்லது கருண் நாயர் ஆகியோரில் யாரையாவது தற்காலிகமாக அணியிலிருந்து நீக்குங்கள்”

இதையும் படிங்க: பிளிண்டாப் மற்றும் ஸ்டோக்ஸ்க்கு இணையான சாதனையை இங்கிலாந்து மண்ணில் நிகழ்த்திய – ரிஷப் பண்ட்

“அது போன்ற சூழ்நிலையில் நான் வாஷிங்டன் சுந்தரை தேர்ந்தெடுப்பேன். அவரை கொண்டு வருவதால் பேட்டிங் துறையில் திடமான வலிமை கிடைக்கும். பவுலிங் துறையில் கொஞ்சம் வெரைட்டி கிடைக்கும்” என்று கூறினார். அவர் கூறுவது போல அடுத்த போட்டியில் இந்திய அணியில் அதிரடியான சில மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நித்திஷ் ரெட்டியும் அணிக்குள் வருவதற்கு வாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement