- Advertisement -
இந்திய கிரிக்கெட்

1992இல் இந்தியா செஞ்ச நன்றியை மறந்துட்டு இழிவா பேசாதீங்க.. தெ.ஆ கோச் சுக்ரியை விளாசிய கவாஸ்கர்

இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு எதிராக கடந்த வாரம் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 25 வருடங்கள் கழித்து எதிராக சொந்த மண்ணில் தோற்றது. அத்தொடரின் 2வது போட்டியில் 4வது நாளில் தென்னாப்பிரிக்கா வெற்றிக்கு தேவையான முன்னிலையைப் பெற்று டிக்ளர் செய்ய தாமதப்படுத்தியது. அதற்கான காரணத்தைக் கேட்ட போது இந்திய அணியை தாங்கள் வெற்றியை நெருங்க விடாமல் க்ரோவெல் செய்ய விரும்புவதாக தென்னாப்பிரிக்க பயிற்சியாளர் சுக்ரி கோன்ராட் தெரிவித்தது சர்ச்சையானது.

அதாவது ஆங்கிலத்தில் க்ரோவெல் என்று சொல்லுக்கு இழிவான பொருட்கள் உள்ளன. குறிப்பாக 1976ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸை தோற்கடித்து க்ரோவெல் செய்ய விரும்புவதாக அதாவது அடிமைப்படுத்த விரும்புவதாக அப்போதைய இங்கிலாந்து கேப்டன் டோனி கிரைக் இனவெறியை தூண்டும் வகையில் பேசினார். அதனால் தங்களது ரத்தம் கொதிப்பதாக சொன்ன க்ளைவ் லாய்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் 0 – 3 என்ற கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்து அவருக்கு பதிலடி கொடுத்தது.

- Advertisement -

1992 நன்றியை மறக்காத்தீங்க:

அதே போன்ற தொனியில் இந்தியாவை வீழ்த்த விரும்புவதாக சுக்ரி சொன்னது சர்ச்சையை உண்டாக்கியது. அதற்கு அனில் கும்ப்ளே போன்ற முன்னாள் இந்திய வீரர்கள் கண்டனம் தெரிவித்தனர். தங்களது பயிற்சியாளர் இந்தியாவை அப்படி பேசியிருக்கக் கூடாது என்று தென்னாபிரிக்கா ஜாம்பவான் டேல் ஸ்டைனும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு கடந்த 30 வருடங்களாக இந்தியா செய்து வரும் உதவிகளின் நன்றியை சுக்ரி மறக்கக்கூடாது என்று சுனில் கவாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சர்வதேச கிரிக்கெட்டில் தடை பெற்றிருந்த தென்னாப்பிரிக்கா 1992இல் மீண்டும் விளையாட வந்தக் கதையை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும். 20 வருடங்களுக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த தென்னாப்பிரிக்காவை மீண்டும் விளையாட அனுமதிக்குமாறு ஐசிசியிடம் 1992இல் இந்திய கிரிக்கெட் சங்கம் தான் வலியுறுத்தியது”

- Advertisement -

கவாஸ்கர் சாடல்:

“தென்னாப்பிரிக்கா தடையிலிருந்து மீண்டும் வந்து தங்களின் முதல் போட்டியை இந்தியாவில் கொல்கத்தாவில் விளையாடியது. தற்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் எஸ்ஏ20 டி20 தொடரில் உள்ள 6 அணிகளில் 5 அணிகளின் உரிமையாளர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அந்த இந்திய உரிமையாளர்கள் ஏராளமான தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு வாய்ப்பையும் வலுவான கேரியரையும் உருவாக்குவதற்கான இடத்தைக் கொடுக்கிறார்கள்”

“அப்படி இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா பல தசாப்தாங்களாக நட்புறவில் உள்ளன. இரு அணிகளின் போட்டிகள் தரமானதாக இருக்குமே தவிர எப்போதும் விரோதமாக இருந்ததில்லை. எனவே உங்களுடைய கருத்து தவறான நேரத்தில் தவறான இடத்தில் வந்துள்ளது. அடுத்த செய்தியாளர்கள் சந்திப்பில் சுக்ரி அதை தெளிவுபடுத்துவார் என்று நம்புகிறேன்”

இதையும் படிங்க: டீ போடுற மாதிரி ஈஸியா இதை செய்யும்.. கிங் கோலி சாதனைகளை துரத்தல.. சேவாக் பாராட்டு

“அதற்காக மன்னிப்பு தேவையில்லை. மன்னிப்பை நான் நம்பவும் இல்லை. விளையாட்டின் சூட்டில் அப்படி நடப்பது இயல்பாகும். இருப்பினும் கடந்த 30 வருடங்களாக கொண்டுள்ள இந்தியா – தென்னாப்பிரிக்கா நட்புறவை கருத்தில் கொண்டு அவர் தான் சொன்ன கருத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -