INDvsRSA : அவரை தவிர வேறு யாரும் டீம்ல இல்லையா? இந்திய அணியை கடுமையாக சாடிய – சுனில் கவாஸ்கர்

Gavaskar
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆபிரிக்க அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி டெல்லி மைதானத்தில் நடைபெற்ற போது இந்திய அணி 211 ரன்கள் குவித்தும் அதனை கட்டுப்படுத்த முடியாமல் பந்துவீச்சில் மோசமான செயல் பாட்டை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்தது.

INDvsRSA

அந்த போட்டியில் டெத் ஓவர்களில் அதிக அளவு ரன்கள் கசிந்ததால் இந்திய அணியின் பந்துவீச்சு மீது ஒரு விமர்சனமும் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கட்டாக் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி 148 ரன்கள் மட்டுமே அடித்ததால் தென்னாபிரிக்க அணி எளிதாக அந்த இலக்கை சேஸிங் செய்து வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் மட்டும் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 113 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவரைத் தவிர மற்ற எந்த பந்து வீச்சாளர்களும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இந்த இரண்டு போட்டிகளின் வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி தற்போது இந்த தொடரில் 2-0 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Bhuvaneswara Kumar

இந்நிலையில் இந்தப் போட்டியில் விளையாடிய இந்திய அணியை கடிந்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் கூறுகையில் : இந்திய அணியில் புவனேஸ்வர் குமாரை தவிர மற்ற எந்த பந்து வீச்சாளர்களும் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை என்பதுதான் தற்போது உள்ள பிரச்சினை.

- Advertisement -

நிச்சயம் எதிரணியின் விக்கெட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே அவர்களை அழுத்தத்திற்குள் கொண்டுவர முடியும். ஆனால் தற்போது நடைபெற்றுள்ள போட்டிகளில் புவனேஸ்வர் குமார் தவிர மற்ற யாரும் விக்கெட்டை வீழ்த்துவது கிடையாது.

இதையும் படிங்க : IND vs RSA : தப்பு பண்ணிட்டீங்க, பண்ட்க்கு பதில் அவரே கேப்டனா இருந்திருக்கலாம் – முன்னாள் ஆஸி வீரர் கருத்து

இப்படி ஒரேயொரு விக்கெட் டேக்கரை வைத்துக் கொண்டா ஒரு அணியாக விளையாடுவீர்கள்? மற்ற பந்துவீச்சாளர்களே அணியில் இல்லையா என்று கோபத்துடன் சுனில் கவாஸ்கர் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் எஞ்சியுள்ள 3 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட தென்னாப்பிரிக்க அணி இத்தொடரை கைப்பற்றி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement