அவங்களுக்கு இதே வேலையே போச்சி. நான் நம்பமாட்டேன் – ஆங்கில மீடியாவை விளாசிய சுனில் கவாஸ்கர்

gavaskar
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 4 போட்டிகள் சிறப்பாக முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 10-ஆம் தேதியும் மான்செஸ்டரில் நடைபெறயிருந்த கடைசி டெஸ்ட் போட்டி கொரோனா அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டி ரத்தானதற்கு இந்திய வீரர்களே காரணம். அவர்கள் மறுப்பு சொன்னதால் இந்த போட்டி நடைபெறாமல் போனது என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

INDvsENG

- Advertisement -

அணி வீரர்களுடன் நெருக்கமாக இருந்த பிசியோதெரபிஸ்ட் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டதாலே வீரர்கள் இந்த போட்டியில் பயந்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் போட்டிக்கு முந்தைய நாளில் நடைபெற்ற சோதனைகள் அனைத்தும் எதிர்மறையான முடிவுகளையே தந்தன. இதனால் இந்திய வீரர்கள் போட்டியை விளையாட மறுத்து விட்டார்கள் என ஆங்கில செய்தித்தாள்கள் செய்திகளை வெளியிட்டன.

இந்நிலையில் ஆங்கில மீடியாக்களில் வெளியான இந்த கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறுகையில் : ஆங்கில ஊடகங்கள் எப்போதுமே இந்திய அணியை பற்றி நல்லதாக சொல்லவோ, எழுதவோ மாட்டார்கள். அவர்களுக்கு எப்போதும் இந்திய வீரர்களை குற்றம் சாட்டியே பழக்கம். இதில் தயவு செய்து உண்மையை கண்டுபிடித்து அதன் பின் யார் மீது தவறு என்று விரல்களை காட்டுங்கள் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

IND

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்த தொடரில் 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை பெற இந்திய வீரர்கள் கடுமையாக உழைத்தனர். அதுமட்டுமின்றி கடைசி போட்டியில் வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் தொடரை வெல்ல இந்திய வீரர்கள் காத்து இருந்தனர். அதனால் 5வது டெஸ்ட் போட்டியில் விளையாட மறுத்தது இந்திய வீரர்கள் தான் என்று குறை கூறுவதை நான் நம்ப மாட்டேன். எந்தவித ஆதாரமும் இல்லாமல் இது போன்ற குற்றச்சாட்டுகளை செய்யக்கூடாது என்றும் காட்டமான தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பி.சி.சி.ஐ ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையில் இருநாட்டு நிர்வாகங்களும் சம்மதித்து தான் இந்த முடிவை எடுத்ததாகவும் நிச்சயம் இந்த போட்டி மற்றொரு நாளில் நடைபெறும் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement