
லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. ஜூலை 10ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 387 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதிகபட்சமாக கேஎல் ராகுல் 100, ரிஷப் பண்ட் 74, ஜடேஜா 72 ரன்களை எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து விளையாடிய இந்திய அணியும் மிகச்சரியாக 387 ரன்கள் எடுத்ததால் ஸ்கோர் சமனில் முடிந்தது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 100, ரிஷப் பண்ட் 74, ஜடேஜா 72 ரன்களை எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அடுத்ததாக இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. முன்னதாக ஒரு ஓவருக்கு 2 பவுன்சர்கள் வீச வேண்டும் என்ற விதிமுறை இருப்பதை அனைவரும் அறிவோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இப்போட்டியில் 3வது நாளில் இந்தியாவை ரன்கள் எடுக்க விடக்கூடாது என்பதற்காக இங்கிலாந்து பெரும்பாலான நேரங்களில் உள்வட்டத்திற்கு வெளியே 6 ஃபீல்டர்களை நிறுத்தி ஷார்ட் பிட்ச் பந்துகளை போட்டுத் தள்ளியது.
கடைசியில் பார்த்தால் 3வது நாளில் மட்டும் இங்கிலாந்து சுமார் 56 – 60% பந்துகளை ஷார்ட் பிட்ச் பந்துகளாக போட்டது தெரிய வந்தது. அதை அறிந்த சுனில் கவாஸ்கர் இங்கிலாந்தின் இந்த திட்டம் மட்டமானது என்று சாடியுள்ளார். மேலும் இங்கிலாந்தின் இந்த மோசமான திட்டத்தை அடக்குமாறு அவர் ஐசிசி விதிமுறைகள் ஒழுங்குமுறை கமிட்டியின் தலைவராக இருக்கும் சௌரவ் கங்குலிக்கு கோரிக்கையும் வைத்துள்ளார்.
இது பற்றி கவாஸ்கர் பேசியது பின்வருமாறு. “இன்று வீசப்பட்ட பந்துகளில் 56% ஷார்ட்டாக போடப்பட்டுள்ளது. பவுன்சர்கள் வீசுவதற்காக இங்கிலாந்து பவுண்டரி எல்லையில் 4 ஃபீல்டர்கள் காத்திருக்க வைத்தனர். என்னைப் பொறுத்த வரை இது கிரிக்கெட் கிடையாது. முந்தைய காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் இப்படி செய்ததாலேயே ஒரு ஓவருக்கு 2 பவுன்சர்கள் மட்டுமே வீச வேண்டும் என்ற விதிமுறை கொண்டு வரப்பட்டது”
இதையும் படிங்க: உண்மையில் அங்க சுப்மன் கில் தான்.. அந்த முன்னாள் இந்திய கேப்டன் மாதிரி நடிச்சாரு.. ட்ராட் விமர்சனம்
“ஆனால் இங்கே வீசப்படும் பவுன்சர்கள் மற்றும் ஃபீல்டிங்கை பாருங்கள். இது கிரிக்கெட் கிடையாது. லெக் சைட் பகுதியில் 6 ஃபீல்டருக்கு மேல் இருக்கக்கூடாது. ஐசிசி ஆண்கள் கமிட்டி சேர்மன் சௌரவ் கங்குலி இதை கேட்டுக் கொண்டிருந்தால், தயவு செய்து இனிமேல் லெக் சைட் பகுதியில் 6 ஃபீல்டர்களை வைக்க அனுமதிக்காதீர்கள்” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து 4வது நாளில் இங்கிலாந்து அணிக்கு பதிலடி கொடுத்து சுருட்ட இந்தியா தயாராக உள்ளது.