ராகுல் டிராவிட் கோச்சா இருந்தும் இந்த தப்பு நடக்குறது ஆச்சரியமா இருக்கு – சுனில் கவாஸ்கர் விளாசல்

Gavaskar-and-Dravid
- Advertisement -

பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை (2-1) என்ற கணக்கில் இழந்த வேளையில், கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியானது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி வங்கதேச அணியை வாஷ்அவுட் செய்துள்ளது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு இந்த டெஸ்ட் தொடரின் மூலம் இந்திய அணி பழி தீர்த்துள்ளது.

Shreyas Iyer vs Ban

- Advertisement -

அதன்படி கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி துவங்கிய இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய வங்கதேச அணி தங்களது முதல் இன்னிங்சில் 227 ரன்களை குவித்தது. பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது 314 ரன்களை குவித்தது.

அதன் காரணமாக 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய பங்களாதேஷ் அணியானது 231 ரன்களை குவித்தது. இதனால் இந்திய அனிங்கு 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கினை இந்திய அணி எளிதாக விரட்டி எட்டிப்பிடிக்கும் என்று எதிர்பார்த்த வேளையில் மெஹதி ஹாசன் மற்றும் சாகிப் அல் ஹசன் ஆகியோரது சிறப்பான பந்துவீச்சினால் துவக்கத்திலிருந்தே தடுமாறியது. ஒரு கட்டத்தில் 37 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்த இந்திய அணியானது 74 ரன்களுக்கு 7 இழந்து பெரிய அளவில் ஆட்டம் கண்டது.

Kohli

இந்நிலையில் அந்த இக்கட்டான சூழலில் கைகோர்த்த ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் அஷ்வின் ஆகியோரது ஜோடி மேலும் விக்கெட்டுகளை சரிய விடாமல் இறுதிவரை சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர். இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் 29 ரன்களையும், அஷ்வின் 42 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

இன்னைலயில் இந்த போட்டியில் ஸ்லிப் பகுதியில் நின்ற இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வீரரான விராட் கோலி 4 கேட்சுகளை நழுவவிட்டார். வழக்கமாக விராட் கோலி ஒரு கேட்சை தவறவிட்டாலே அது ஆச்சரியமாக பார்க்கப்படும். ஆனால் இம்முறை அவர் 4 கேட்ச்களை தவறவிட்டது ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் இந்த தவறு குறித்து பேசிய முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது :

இதையும் படிங்க : மொத்த டீமையும் கெடுப்பது நீங்கதான், இதெல்லாம் ஒரு முடிவா? டிராவிட் – ராகுலை கடுமையாக விமர்சித்த கவாஸ்கர், நடந்தது என்ன

ஸ்லிப்பில் நிற்கும் இந்திய வீரர்கள் முழுங்காலில் கை வைத்து நிமிர்ந்து நிற்கிறார்கள். இந்த ஒரு நடைமுறையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட கேட்சுகளை பிடித்த ஒரே இந்தியரான ராகுல் டிராவிட் அவர்களின் பயிற்சியின் கீழ் இந்த தவறு நடப்பது என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று சுனில் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement