இந்தியான்னா மட்டும் இளிச்சவாயா? லண்டன், சிட்னியில் கொத்தாக விழுந்தப்போ எங்க போனீங்க.. கவாஸ்கர் பதிலடி

Sunil Gavaskar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதனால் 15 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்காவிடம் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் தோற்ற இந்தியா 1 – 0* (2) என்ற கணக்கில் தொடரில் பின்தங்கியுள்ளது. அந்தத் தோல்விக்கு கொல்கத்தாவில் அமைக்கப்பட்டிருந்த சூழலுக்கு சாதகமான பிட்ச் முக்கிய காரணமாக அமைந்தது.

அதனால் இந்திய அணியை இந்தியாவைச் சேர்ந்த பல ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அதை விட வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் இந்தியா குறுக்கு வழியில் வெற்றி பெறுவதற்காக சுழலுக்கு சாதகமான பிட்ச்களை அமைப்பதாக விமர்சிக்கின்றனர். குறிப்பாக மோசமான பிட்ச்சை அமைத்த இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன் தென்னாப்பிரிக்காவிடம் தோற்பதற்கு தகுதியான அணி என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்தார்.

- Advertisement -

இந்தியான்னா இளிச்சவாயா:

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2025 சிட்னி டெஸ்ட் 3 நாட்களுக்குள் முடிந்தது, இங்கிலாந்தில் நடைபெற்ற 2025 லண்டன் ஓவல் போட்டியின் 2வது நாளில் கொத்தாக 15 விக்கெட்டுகள் விழுந்ததாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அப்போதெல்லாம் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் தங்கள் நாட்டின் பிட்ச் பற்றி இவ்வளவு அதிகமாக பேசவில்லையென கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தியாவில் ஒரு போட்டி 3 நாட்களுக்குள் முடிந்து விட்டால் அனைவரும் சேர்ந்து வந்து விமர்சிப்பதாக கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

எனவே இந்தியா மட்டும் இளிச்சவாயா? என்று தெரிவிக்கும் அவர் கொல்கத்தா பிட்ச் மீதான வெளிநாட்டவர்களின் விமர்சனங்களுக்கு கொடுத்துள்ள பதிலடி பின்வருமாறு. “ஈடன் கார்டன்ஸ் போட்டியில் 2வது நாளில் 15 விக்கெட்டுகள் விழுந்ததால் முன்னாள் இங்கிலாந்து வீரர்களில் ஒருவர் ஆடுகளத்தைப் பற்றி குரல் கொடுத்துள்ளார். இம்முறை கொல்கத்தா ஆடுகளம் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது”

- Advertisement -

கவாஸ்கர் பதிலடி:

“அதற்காக பேட்டிங் செய்ய முடியாத அளவுக்கு அசாத்தியமானதாக இல்லை. அங்கே அவுட்சைட் எட்ஜ் வாங்கிய பின்பும் பவுமா உறுதியான ஆட்டத்தைக் காண்பித்தார். அதுவே டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உகந்த முறையான ஆட்டமாகும். ஓவல் போட்டியில் 2வது நாளில் 15 விக்கெட்டுகள் விழுந்தது. ஆனால் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் இருக்கும் பிட்ச்கள் பற்றி ஒரு வார்த்தை கூட விமர்சனமாக வரவில்லை”

இதையும் படிங்க: வாஷிங்டன் சுந்தர் நல்ல பிளேயர் தான்.. ஆனா அவருக்கு இந்த இடம் செட்டாகாது – கங்குலி கருத்து

“சமீபத்தில் பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளிலும் நிறைய விக்கெட்டுகள் விழுந்தன. ஆனால் அதைப் பற்றி கிண்டலாகக் கூட பேச்சுக்கள் வரவில்லை. அவை அனைத்தும் இந்தியா மற்றும் இந்திய ஆடுகளங்களை விமர்சிப்பதற்காக விடப்பட்டன. எனவே இந்திய ஆடுகளங்கள் மற்றும் இந்திய கிரிக்கெட்டின் மேல் எல்லாவற்றிலும் தவறுகளைக் கண்டுபிடிப்பது பற்றிய அவதூறு மிகவும் கண்காணித்தக்கது” என்று கூறினார்.

Advertisement