உங்களுக்கு வேலை இல்லையா? உங்க டீம்ல நாங்க இதை செய்யலாமா? ஆஸிக்கு கவாஸ்கர் பதிலடி

Sunil Gavaskar 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 டெஸ்ட் தொடர்களையும் இந்தியா முதல் முறையாக வெற்றி பெற்று வரலாறு காணாத சாதனை படைத்தது.

எனவே இம்முறை ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது. ஆனால் அதற்கு பதிலடி கொடுத்து இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா வெல்லும் என்று ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட் போன்ற முன்னாள் வீரர்கள் சமீபத்தில் கணிப்பு வெளியிட்டிருந்தனர். சொல்லப்போனால் கேப்டன் பட் கமின்ஸ், நேதன் லயன் போன்ற ஆஸ்திரேலிய வீரர்களே இந்தியாவை வீழ்த்த திட்டங்கள் வகுத்து வருவதாக கூறியிருந்தார்கள்.

- Advertisement -

வேலை இல்லையா:

குறிப்பாக ரிஷப் பண்ட்டை அமைதியாக வைத்திருந்து இந்தியாவை வெல்வோம் என்று கமின்ஸ் கூறினார். அதே போல ஷமி காயத்திலிருந்து குணமடையவில்லை எனில் மயங் யாதவ் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் பிரட் லீ தெரிவித்துள்ளார். இந்நிலையில் தொடர் துவங்குவதற்கு முன்பாகவே இப்படி தேவையின்றி பேசும் ஆஸ்திரேலியர்களுக்கு வேறு வேலை இல்லையா? என்ற வகையில் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியதற்கு வருமாறு. “இப்படி பேசுவது வீரர்கள் கிடையாது. வீரர்கள் தங்களுடைய ஆட்டத்தில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் ஊடகங்களை சுற்றி இருப்பவர்கள் ஆஸ்திரேலியாவை பற்றி பேசுகிறார்கள். ஆஸ்திரேலியாவில் என்ன நடக்கும் என்பது பற்றி மீடியாவில் நிறைய பேச்சுக்கள் காணப்படுகின்றன”

- Advertisement -

நாங்க எதாவது சொல்றோமா:

“அதே போல ஆஸ்திரேலிய வீரர்களும் அனைத்து நேரமும் இந்திய அணியை பற்றி பேசுகிறார்கள். அவரை தேர்ந்தெடுகள், இவரை தேர்ந்தெடுங்கள் என்ற வகையில் பேசுகிறார்கள். ஆனால் யாருமே ஆஸ்திரேலிய அணியை பற்றி எங்களிடம் கேட்கவில்லை. அனைத்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களும் இவரை தேர்ந்தெடுங்கள் அவரை தேர்ந்தெடுங்கள் என்று இந்தியாவுக்கு சொல்கிறார்கள். அப்படி சொல்பவர்கள் ஆஸ்திரேலிய அணியை இந்தியர்கள் தேர்ந்தெடுங்கள் என்று எங்களிடம் சொல்ல வேண்டும்”

இதையும் படிங்க: 12 வருஷ தோல்வி.. அதனால இப்போதையை இளம் இந்திய பசங்க நாட்டுக்காக விளையாட விரும்பல.. எம்எஸ்கே பிரசாத்

“எனவே ஆஸ்திரேலியாவை பற்றி இப்போதே பேசாதீர்கள். தற்போது என்ன நடக்கிறது என்பதைப் பற்றி பேசுங்கள். தற்சமயத்தில் என்ன நடக்கிறது என்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் போது விஷயங்கள் தாமாக நடக்கும். நாம் அங்கே செல்லும் போது ஆஸ்திரேலியாவை வீழ்த்துவதற்கான வழியை கண்டறிவோம். அதை கடந்த சில தொடர்களில் நாம் செய்து வென்றோம். அதே போல இப்போதும் வழியை கண்டறிந்து வெல்வோம்” என்று கூறினார்.

Advertisement