இப்போதுள்ள இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் போன்று விளையாட ஆசைப்பட்டேன் – மனம்திறந்த கவாஸ்கர்

Sunil-gavaskar
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் ஜாம்பவானான சுனில் கவாஸ்கர் இந்திய அணிக்காக 125 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 108 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரத்து 122 ரன்களும் (10122), ஒருநாள் போட்டிகளில் 3 ஆயிரத்து 92 ரன்கள் (3092) குவித்துள்ளார்.

gavaskar

- Advertisement -

இந்திய அணியின் மிகப்பெரிய பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தற்போது வரை வர்ணனையாளராக கிரிக்கெட் உடனான தொடர்பிலேயே உள்ளார். இந்நிலையில் தான் விளையாடிய காலத்தில் எவ்வாறு விளையாட ஆசைப்பட்டேன் என்பது குறித்து தற்போது கருத்து ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதுகுறித்து அவர் “இந்தியா டுடே” நாளிதழுக்கு கூறியதாவது : ஒருநாள் போட்டிகளிலும் சரி, டெஸ்ட் போட்டிகளிலும் சரி தற்போதைய இந்திய அணியின் அதிரடி வீரரான ரோகித் சர்மா சந்திக்கும் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டுகிறார். அப்படிப்பட்ட ஒரு அதிரடியைத்தான் நானும் அப்போது விளையாட நினைத்தேன்.

Gavaskar

ஆனால் அப்போதிருந்த சூழ்நிலையும், என் மீது இருந்த நம்பிக்கையும் குறைவு அதன் காரணமாக அப்போது என்னால் ரோகித் சர்மா போல் விளையாட முடியவில்லை. ஆனால் எனக்கு அடுத்த தலைமுறை வீரர்கள் இவ்வாறு விளையாடுவதைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

Rohith

மேலும் அவர்களின் ஆட்டத்தை பார்ப்பதற்கே அழகாக உள்ளது. இப்போது உள்ள வீரர்கள் இன்னும் ஒரு தலைமுறைக்கு உதாரணமாக பேட்டிங் செய்து வருகிறார்கள். இது இந்திய கிரிக்கெட்டிற்கு பெருமையான விடயம் என்றும் சுனில் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement