எத்தனை பேர் வந்தாலும் போனாலும் சரி. இந்தியாவின் நம்பர் 1 வீரர் இவர்தான் – சுனில் கவாஸ்கர் ஓபன் டாக்

Gavaskar
- Advertisement -

இந்திய அணியில் கிட்டத்தட்ட எத்தனையோ ஜாம்பவான்கள் விளையாடி இருப்பதை நாம் கண்டிருப்போம். அந்த வகையில் ஏகப்பட்ட வீரர்கள் வரிசையாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சாதித்து ஓய்வினை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்களில் இதுவரை விளையாடி மக்களுக்கு பிடித்த மற்றும் ரசிகர்கள் நேசித்த நம்பர் ஒன் கிரிக்கெட் வீரர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதுகுறித்து அவர் “இந்தியா டுடே” பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ள போது அவர் கூறுகையில் : என்னைப் பொறுத்தவரை இந்திய அணியின் நம்பர் ஒன் வீரர் என்றால் அது இப்போது மட்டுமல்ல எப்போதும் கபில் தேவ் தான். அவரால் பந்து வீச முடியும், பேட்டிங் செய்ய முடியும், அது மட்டுமின்றி இந்திய அணி வெற்றி பெற வைக்கவும் முடியும்.

அதனால் எப்போதும் கபில் தேவை தான் இந்திய அணியின் நம்பர் ஒன் வீரர் என்று கூறுவேன். அதுமட்டுமின்றி விரைவாக சதமடிக்கும் முடியும் என்றால் அது கபில்தேவ் ஆல் மட்டுமே முடியும். மேலும் அதே போன்று அவர் அடித்த அந்த சதம் போட்டியை தலைகீழாக மாற்றிவிடும் என்றாலும் கபில்தேவ் தான் என்று பலரும் கூறி உள்ளார்.

Kapil

மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : இவை எல்லாம் அவர் செய்து காட்டியுள்ளார். ஒரு பீல்டராகவும் பல முக்கிய கேட்சிகளையும் அவர் பிடித்துள்ளார். என்னை பொறுத்தவரை அவர் ஒரு முழுமையான கிரிக்கெட் வீரர் . கிரிக்கெட்டின் அனைத்து துறைகளிலும் சாதிக்க கூடிய ஒரே பிளேயர் அவர்தான் என்று கவாஸ்கர் கபில் தேவிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

kapildev

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக 1983 ஆம் ஆண்டு முதல் முறை உலகக் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த அணியில் சுனில் கவாஸ்கர் இடம் பெற்றிருந்தார் என்பது கூடுதல் சிறப்பு.

Advertisement