தனது சாதனையை உடைத்த கில்லுக்கு 2 பரிசை கொடுத்த கவாஸ்கர்.. 2021 காபா சட்டையை அணிவேன் என வாக்குறுதி

Sunil gavaskar Gill
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 224 ரன்களும் இங்கிலாந்து 247 ரன்களும் அடித்தன. அடுத்த இன்னிங்ஸில் அபாரமாக விளையாடிய இந்தியா 396 ரன்கள் குவித்து இங்கிலாந்து வெற்றி பெற 374 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

அதை துரத்தும் இங்கிலாந்தின் 3வது நாள் முடிவில் 50 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக இந்தத் தொடரில் சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட போது பலரும் விமர்சித்தார்கள். குறிப்பாக இதற்கு முன் வெளிநாட்டில் பெரிய ரன்கள் குவித்திராத அவர் பிளேயிங் லெவனில் விளையாடுவதற்கே தகுதியற்றவர் என்று சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். ஆனால் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் தொடரிலேயே அட்டகாசமாக விளையாடிய அவர் 754 ரன்கள் குவித்துள்ளார்.

- Advertisement -

கவாஸ்கர் நெகிழ்ச்சி:

அதன் வாயிலாக ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய கேப்டன் என்ற சுனில் காஸ்கரின் (732) சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை படைத்தார். அதே சமயம் ஒரு தொடரில் அதிக ரன்கள் (774) ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற கவாஸ்கரின் சாதனையை அவர் தவற விட்டார். இருப்பினும் தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கில் இந்திய அணியை தலைமைத் தாங்க தாம் பொருத்தமானவன் என்பதை நிரூபித்துள்ளார்.

அப்படி முதல் தொடரிலேயே தம்முடைய ஒரு சாதனையை உடைத்த கில்லுக்கு நேற்றைய நாளின் முடிவில் ஜாம்பவான் கவாஸ்கர் 2 பரிசை கொடுத்தார். சிவப்பு வண்ணத்தில் தம்முடைய கையெழுத்திட்ட தொப்பி ஒன்றை அவருக்கு கவாஸ்கர் பரிசாக கொடுத்தார். அத்துடன் தனது கையொப்பமிட்ட சட்டை ஒன்றையும் கில்லுக்கு அவர் பரிசாக கொடுத்தார்.

- Advertisement -

ராசியான காபா சட்டை:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வெல்டன். என்னுடைய இன்னொரு சாதனையையும் முறியடிப்பீர்கள் என்று நான் எதிர்பார்த்தேன். இருப்பினும் அடுத்த தொடருக்கு எடுத்துச் செல்ல நீங்கள் சில விஷயங்களை பெற்றுள்ளீர்கள். இது என்னிடமிருந்து சிறிய பரிசு. என்னுடைய கையொப்பமிட்ட சட்டை மற்றும் தொப்பி. இந்தச் சட்டை எனக்காக செய்யப்பட்டதால் உங்களுக்கு பொருந்துமா என்று தெரியவில்லை”

இதையும் படிங்க: இங்கிலாந்துல எப்படி ஆடப்போறாங்கனா கேட்டிங்க? இந்திய பேட்ஸ்மேன்கள் நிகழ்த்திய – வரலாற்று சாதனை

“இந்த சிறிய தொப்பியை சிலருக்கு மட்டுமே நான் கொடுப்பேன். வாழ்த்துக்கள், கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். இன்று நீங்கள் கடைசியாக அடித்த பௌண்டரி அற்புதமாக இருந்தது. 2021 ஆஸ்திரேலியா காபா டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்ற நாளன்று அணிந்திருந்த அதிர்ஷ்டமான சட்டையை நான் நாளை மீண்டும் இப்போட்டியில் வெல்வோம் என்ற நம்பிக்கையுடன் அணிந்து வருவேன்” என்று கூறினார். அதை நன்றி சொல்லி வாங்கிக்கொண்ட கில் நாளை காபா சட்டையை அணிந்து வாருங்கள், வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை கவாஸ்கருக்கு கொடுத்தார்.

Advertisement