
சுப்மன் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியானது தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை இழந்து 564 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. பின்னர் தற்போது ஆப்கானிஸ்தான் அணியானது அவர்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.
அந்த வகையில் நேற்று இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சார்பாக அறிமுகமான இளம் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான மானவ் சுதர் பேட்டிங்கின் போது 48 பந்துகளை சந்தித்து 28 ரன்கள் சேர்த்து அசத்தினார்.
அதோடு மட்டுமின்றி இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் ரவீந்திர ஜடேஜாவிற்கு பதிலாக அவரது இடத்திற்கு மாற்றுவீரராக பார்க்கப்படும் மானவ் சுதர் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் அவரை பலரும் பாராட்டி பேசி வருகின்றனர்.
இவ்வேளையில் மானவ் சுதரின் செயல்பாடு குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் கூறியதாவது : மானவ் சுதர் பந்துவீச்சில் மட்டுமல்ல பேட்டிங்கிலும் அவரது நம்பிக்கையை காண்பித்துள்ளார். அவரது கால் நகர்வுகள் மற்றும் கிரீஸிற்கு ஏற்றவாறு நிற்பது என அனைத்துமே தனித்துவமாக தெரிந்தன. பந்துவீச்சில் அவர் துல்லியமாக இருக்கிறார். பேட்ஸ்மன்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறார்.
இதையும் படிங்க : முதல் இந்திய வீரராகவும், 4 ஆவது சர்வதேச வீரராகவும் ரிஷப் பண்ட் நிகழ்த்தப்போகும் சாதனை – விவரம் இதோ
பந்துவீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தை அவர் நன்றாக பயன்படுத்திக் கொண்டார். ஆனால் சுழற்பந்து வீச்சாளராக ஒரு வீரருக்கு உண்மையான சோதனை யாதெனில் : பிளாட் பிட்சுகளிலும் அவர் சிறப்பாக செயல்பட வேண்டும். அதை மட்டும் அவர் சரியாக பிடித்துக்கொண்டால் இந்திய டெஸ்ட் அணியில் அவர் நல்ல வலுவான போட்டியாளராக மாறுவார் என சுனில் கவாஸ்கர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.