ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கெதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி பர்த் நகரில் முடிவடைந்த வேளையில் அந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டாவதாக அடிலெய்டில் நடைபெற்ற பகல் இரவு போட்டியில் தோல்வியை சந்தித்தது.
விராட் கோலியை பார்த்து மற்ற வீரர்கள் கத்துக்கனும் :
இதன் காரணமாக இரு அணிகளும் தலா வெற்றியுடன் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் இந்த தொடரில் சமநிலையில் இருக்கும் வேளையில் இனிவரும் போட்டிகளின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு உச்சத்தை தொட்டுள்ளது.
அதோடு இரண்டாவது போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலிலும் மூன்றாவது இடத்திற்கு சரிந்துள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட படுதோல்விக்கு பிறகு சிறிது நேரத்தில் விராட் கோலி மைதானத்தில் இருந்து வெளியேறி வலைப்பயிற்சியை மேற்கொண்டார்.
விராட் கோலி இப்படி துரிதமாக செயல்பட்டு வலைப்பயிற்சியில் ஈடுபட்டது குறித்து பாராட்டியுள்ள சுனில் கவாஸ்கர் கூறுகையில் : அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது போட்டியின் போது இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்தப் போட்டி முடிந்த கையோடு விராட் கோலி வலைப்பயிற்சிக்கு சென்றதைப் பார்க்கையில் உண்மையிலேயே அவரது அர்ப்பணிப்பை இந்த விடயம் காட்டுகிறது.
இந்தியாவுக்காக அவர் இத்தனை ஆண்டுகளும் என்ன செய்தாரோ, அதனை மீண்டும் செய்ய நினைக்கிறார். அடுத்த போட்டியில் அவர் நிச்சயம் சதம் அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இந்த போட்டியில் அவர் ரன்களை அடிக்கவில்லை என்பதற்காக அவரது உழைப்பு இல்லாமல் போயுள்ளது என்று கூற முடியாது.
இதையும் படிங்க : எல்லா நேரமும் அவரேவா நம்ம டீமை காப்பாத்துவாரு.. இந்திய வீரர்களை வெளுத்து வாங்கிய – ரோஹித் சர்மா
ஏனெனில் அவர் வலைப்பயிற்சியில் வியர்வையை சிந்துகிறார். தொடர்ந்து தன்னை தயார்படுத்தி அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல நினைக்கிறார். விராட்டை போலவே மற்ற இந்திய வீரர்களும் இதுபோன்று பயிற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும் என்று நினைப்பதாக சுனில் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.