டி20 உ.கோ தொடருக்கான உத்தேச அணியை கணித்த சுனில் கவாஸ்கர் – நல்ல டீம் தான்

Gavaskar
- Advertisement -

ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வரும் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான டி20 உலகக் கோப்பை தொடரானது தற்போது நெருக்கத்தில் வந்துள்ளது. இன்னும் ஒரு மாத இடைவெளியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் இந்த தொடருக்காக அனைவரும் காத்திருக்கின்றனர். வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த உலகக் கோப்பை தொடருக்கான அனைத்து அணிகளையும் செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி கெடு விதித்துள்ளது.

Cup

- Advertisement -

இதன் காரணமாக தற்போது நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தங்களது வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகமும் இன்று இரவு அல்லது நாளை காலையில் இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் இந்த டி20 உலக கோப்பை தொடருக்காக அவர் கணித்துள்ள அணியை வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த அணியில் முக்கிய வீரர்களான ஷிகர் தவான் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோருக்கு அவர் இடமளிக்கவில்லை. அவர் தேர்வு செய்த அணி வீரர்களின் பட்டியல் இதோ :

Iyer

ரோகித் சர்மா, விராத் கோலி, கே.எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹார்டிக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், பும்ரா, ஷமி, புவனேஸ்வர் குமார், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல்

இந்த 15 பேர்கொண்ட அணியில் சீனியர் வீரர் ஷிகார் தவான், இளம்வீரர்கள் ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் , குல்தீப் யாதவ், நடராஜன் போன்ற முக்கிய வீரர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement