- Advertisement -
ஆசிய கோப்பை

சாம்சன் சுயநலத்துக்காக விளையாடல.. அதுக்கு தயாரான அவரிடம் எல்லாத் திறமையும் இருக்கு.. கவாஸ்கர் ஆதரவு

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் ஓமன் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. செப்டம்பர் 19ஆம் தேதி அபுதாபியில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய 189 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 56, அபிஷேக் சர்மா 38 ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.

அடுத்து விளையாடிய ஓமன் முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 167/4 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. முன்னதாக அப்போட்டியில் சுப்மன் கில் 5 (8) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியாவும் துரதிஷ்டவசமாக ஒரு ரன்னில் ரன் அவுட்டானதால் மறுபுறம் களமிறங்கிய சஞ்சு சாம்சன் நிதானமாக விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

- Advertisement -

சுயநலம் இல்ல:

எதிர்புறம் வந்த அக்சர் பட்டேல் 26 (13) ரன்கள் எடுத்த போதிலும் சிவம் துபே 5 (8) ரன்னில் பெவிலியன் திரும்பினார். மறுபுறம் தொடர்ந்து நிதானமாகவே விளையாடிய சாம்சன் 56 (45) ரன்களை 124 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்தார். அவருடைய ஆட்டத்தைப் பார்த்த ஒருதரப்பு ரசிகர்கள் தம்முடைய இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவே பெரிய ரன்கள் குவிக்கும் நோக்கத்தில் சாம்சன் மெதுவாக சுயநலமாக விளையாடியதாக சமூக வலைதளங்களில் தெரிவித்தனர்.

இந்நிலையில் சாம்சன் சூப்பர் 4 சுற்றில் அசத்துவதற்காகவே களத்தில் அதிக நேரத்தை செலவிட்டு நிதானமாக விளையாடியதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏனெனில் கடந்தப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு பெறாத சாம்சன் சூப்பர் 4 சுற்றுக்கு முன் அமீரக சூழ்நிலைகளுக்கு தம்மை உட்படுத்திக் கொள்வது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி கவாஸ்கர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

கவாஸ்கர் ஆதரவு:

“சாம்சன் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்தார். நீண்ட நேரம் பேட்டிங் செய்ய வேண்டிய சூழ்நிலை தேவைப்பட்ட போது சாம்சன் அதை செய்தார். ஏனெனில் அடுத்தப் போட்டியில் 4 – 5வது இடத்தில் விளையாட வரும் போது அவருடைய பேட்டிங் நமக்குத் தேவை. ஒருவர் களத்தில் சில ஓவர்கள் நின்று 4 சில சிக்ஸர்கள் பௌண்டரிகள் அடித்து 40 – 50 ரன்கள் குவிப்பது தன்னம்பிக்கையக் கொடுக்கும். அவருடைய டைமிங்கும் நன்றாக இருந்தது”

இதையும் படிங்க: அது அவரோட விருப்பம் அவரு பண்ணாரு.. சூரியகுமார் யாதவுக்கு ஆதரவாக நின்ற சவுரவ் கங்குலி – விவரம் இதோ

“குறிப்பாக காத்திருந்து கடைசி நொடியில் நேராக அவர் அடித்த சிக்சர் பார்க்க விருந்தாக இருந்தது. அவரிடம் பந்தை அடிப்பதற்குப் போதுமான நேரம் இருக்கிறது. அதிலிருந்து நாம் அவருடைய க்ளாஸை பார்க்க முடிந்தது. விரும்பும் இடத்தில் அடிக்கத் தேவையான தேர்வுகளும் அவரிடம் இருந்தது. சில பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமே லெக் அல்லது ஆஃப் சைட் என தாங்கள் விரும்பும் பக்கத்தில் அடிக்கும் திறமை இருக்கும். சாம்சன் அவர்களில் ஒருவர்” என்று கூறினார்.

- Advertisement -