இந்தியாவுக்கு நிதிஷ், ஜெய்ஸ்வால் போதும்.. ஜனவரி 23இல் கம்பீர் என்ன செய்றாரு பாக்குறேன்.. கவாஸ்கர் விளாசல்

Sunil Gavaskar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக சமீபத்தில் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்து வரலாறு காணாத மோசமான சாதனை படைத்தது. அடுத்ததாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையையும் 10 வருடங்கள் கழித்து இந்தியா இழந்தது. அதன் காரணமாக 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இந்தியா கோட்டை விட்டது.

அந்தத் தோல்விக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்களின் சுமாரான ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் ஜெய்ஸ்வால், நித்திஷ் ரெட்டி போன்ற தங்களுடைய விக்கெட்டை உயிராக நினைத்து நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் விளையாடும் வீரர்கள் தான் இந்திய அணிக்கு தேவை என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

அர்ப்பணிப்பு எங்கே:

“பெரிய திரையில் நாம் பார்க்கும் போது நித்திஷ் ரெட்டி – ஜெய்ஸ்வால் ஆகியோர் இந்திய அணிக்காக நன்றாக விளையாடி தங்களுக்கென்று பெயரை உருவாக்க பசியுடன் இருக்கிறார்கள். அது போன்றவர்கள் தான் நமக்குத் தேவை. தங்களுடைய விக்கெட்டை தங்களுடைய உயிர் போல பாதுகாக்கும் பேட்ஸ்மேன்கள் தான் உங்களுக்கு தேவை. அவர்களைப் போன்ற அர்ப்பணிப்பு மிக்கவர்களையே நான் இந்திய அணியில் பார்க்க விரும்புகிறேன்”

“வரும் ஜனவரி 23ஆம் தேதி ரஞ்சிக்கோப்பை போட்டிகள் துவங்குகின்றன? அதனாலேயே இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெறாத இந்திய வீரர்களில் எத்தனை பேர் ரஞ்சிக்கோப்பையில் விளையாடப் போகிறார்கள் என்பதை நான் பார்க்க உள்ளேன். ஆஸ்திரேலிய தொடரில் எத்தனை இந்திய பேட்ஸ்மேன்கள் சதத்தை அடித்தனர். முதல் போட்டியில் அடிக்கப்பட்ட 2 சதம் தவிர்த்து எத்தனை அடிக்கப்பட்டன?”

- Advertisement -

கம்பீர் என்ன செய்றாரு பாப்போம்:

“நித்திஷ் ரெட்டி மட்டுமே சதத்தை அடித்தார். அதை விடுங்கள் எத்தனை பேர் அரை சதத்தை அடித்தார்கள். சதத்தை அடிப்பது கடினம் என்று நீங்கள் இங்கே அமர்ந்து உங்களால் சொல்ல முடியும். ஆனால் போட்டியை மாற்றும் அளவுக்கு எத்தனை பேர் அரை சதத்தை அடித்தார்கள். நிறைய அடிக்கவில்லை. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அரை சதம் அடிப்பதற்கே உறுதி வேண்டும். அது நமது அணியில் குறைவாகவே உள்ளது”

இதையும் படிங்க: பும்ராவை மாதிரி ஆஸ்திரேலிய அணியை இப்படி துவம்சம் செய்ய யாராலும் முடியாது – வாசிம் ஜாபர் பாராட்டு

“நம்முடைய வீரர்களிடம் டெக்னிகல் தவறுகள் இருப்பதை பார்க்கிறேன். நியூசிலாந்து தொடரிலிருந்தே மீண்டும் மீண்டும் அவர்கள் ஒரே தவறை செய்கிறார்கள். அதனாலேயே நாம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறவில்லை. எனவே அடுத்த தொடருக்கு நாம் தயாராக வேண்டும். அதற்கு ஜனவரி 23ஆம் தேதி ரஞ்சிக் கோப்பையில் விளையாடாத வீரர்கள் மீது கௌதம் கம்பீர் என்ன முடிவை எடுக்கிறார் என்பதையும் நான் பார்க்க உள்ளேன். உள்ளூரில் விளையாடவில்லையெனில் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்ப முடியாது என்ற நிலைமை உருவாக வேண்டும்” எனக் கூறினார்.

Advertisement